thirumalvalavan 
தமிழ்நாடு

விஜய் ஆர்.எஸ்.எஸ் திட்டங்களை செயல்படுத்துகிறார்!? -திருமாவளவன் ஓபன் டாக்!

பாஜகவினர் கையில் வைத்துள்ள வேலுக்கும் நாங்கள் கையில் எடுத்துள்ள வேலுக்கும் பல்வேறு வித்தியாசங்கள்....

Saleth stephi graph

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை சார்பில் கிறிஸ்மஸ் பெருவிழா  சென்னை வேப்பேரி உள்ள  தனியார் அரங்கில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவித்து சிறப்புரையாற்றினார் அப்போது மேடையில் பேசிய அவர், 

நமது பேராயர் கதிரொளி மாணிக்கம் முக்கியமான பிரச்சனைகள் குறித்து இங்கு பேசினார். தேவாலயங்கள் கட்ட இயலவில்லை அதற்குரிய அங்கீகாரத்தை பெறுவதற்கு கடினமாக உள்ளது. கல்லறை பெரும் பிரச்சனையாக மாறி உள்ளது. இறந்து போனவர்களுக்காக நாங்கள் அழுவதா அல்லது இறந்து போனவர்களை அடக்கம் செய்ய முடியாமல் இருக்கும் சிக்கலை நினைத்து அழுவதா என்று என்று உருக்கமாக சொன்னார். 

இது சென்னையில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற பிரச்சனை. தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் இருக்கின்ற பிரச்சனையாக தான் கருதுகிறேன் என்றாலும் கூட இன்றைக்கு நம்முடைய கூட்டணியின் தலைமை வெற்றிகரமாக வழி நடத்திக் கொண்டிருக்கிற திராவிட முன்னேற்றக் கழக தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார் ஆகவே நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவரிடத்தில் விளக்குவதற்கு அவரை சந்திக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையாக தான் பார்க்கிறேன் .. 

இதுகுறித்து முதலமைச்சரை சந்திப்பதற்கு உரிய ஏற்பாடுகளை செய்கிறேன். இயேசு பெருமானின் பிறப்பு எத்தகைய சிறப்புக்குரியது பேராயர்கள் எடுத்துரைத்தார்கள். இன்றைக்கும் சாதியால் மதத்தால் இனத்தால் தேசத்தால் மனித குலம் பல்வேறு குழுக்களாக சிதறி கிடந்தாலும் இவர்களை நல்வழிப்படுத்தி  உலக அமைதியை நிலை நாட்டுவது அன்பு ஒன்று மட்டும் தான். கிறிஸ்தவம் என்றால் சகோதரத்துவம் , சமத்துவம், சமூகநீதி  என்று பொருள். 

இதில் எங்கும் வெறுப்பு வன்முறை கிடையாது .கிருத்துவம் தான் சகோதரன் மற்றும் சகோதரி என்கிற ஒரு பண்பாட்டையை வளர்த்தெடுத்தது. நீ எந்த நாட்டை மதத்தை குலத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் நீ எனக்கு சகோதரன் சகோதரி என்ற பண்பாட்டை வளர்த்தது கிறிஸ்தவம். பழிவாங்கும் ஒரு அரசியலை ஜாதி கலப்பு செய்யக்கூடாது என்பதற்காக ஆணவக் கொலை கலாச்சாரத்தை கிறிஸ்துவம் கற்றுத் தந்ததில்லை   சிலர் என்ன நினைக்கிறார்கள் என்றால் ஏதோ ஓட்டுக்காக தான் கிறிஸ்தவர்களோடும் இஸ்லாமியர்களோடும் திருமாவளவன் போன்றவர்கள் நெருக்கமாக இருக்கிறார்கள் என்று குறைத்து மதிப்பிடுகிறார்கள் அது அவர்களுடைய பார்வை குறைபாடு உள்ள பார்வை 

அப்படித்தான் அவர்கள் சிந்திப்பார்கள்.."சிறுபான்மையினர் என்று அடையாளப்படுத்துவதற்கான காரணம் கிறித்துவர்களையும் இஸ்லாமியர்களையும் சகோதரர்களாக அணுகாமல் அன்னியர்களாக சித்தரிக்கிற போக்கு இருக்கிறது வேறு நாட்டவர்களை நடத்துவது போல் இருக்கிற போக்கு இருக்கிறது அவர்களுக்கு எதிரான எதிர்ப்புகள் திட்டமிட்டு உமிழப்படுகிறது .. அந்த வெறுப்பு அரசியலில் இருந்து கிறிஸ்துவ இஸ்லாமிய பெருங்குடி மக்களை பாதுகாப்பதே உண்மையான உயரிய ஜனநாயகம் என்ற அந்த புரிதலில் இருந்து தான் நாம்  இந்த அணுகுமுறைகளை கையாள வேண்டி இருக்கிறது” என பேசிய பின்னர்,  இந்த நிகழ்ச்சி கலந்து கொண்ட அனைவருடனும் இறுதியில் இனிப்புகளை வழங்கி  கேக் வெட்டி கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் பேசுகையில் 

“தமிழிசை அவர்கள் தங்களை சங்கீகள் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்வார்கள். ஆனால் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் அவர்களும் இன்றைக்கு பேசி வரும் பேச்சுகள் மற்றும் அணுகுமுறைகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது , அவர்கள் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் என்ன செயல் திட்டங்களை கொண்டு இயங்கி வருகிறார்களோ அதே செயல் திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் வழியில் அல்லது அதனை தூக்கிப் பிடிக்கும் வகையில் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது 

அந்த அதிர்ச்சியில் என்னுடைய கருத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன், நீண்ட காலமாக சீமான் அவர்களை கவனித்து வருகிறேன். அவருடை அரசியலை அங்கீகரித்து ஆதரித்து வருபவன் நான், ஆனால் சமீபத்தில் அவரின் பேச்சு பெரியாருக்கு எதிராகவும்,சமூக நீதி அரசியலை தகர்க்கும் வகையிலும் அணுகுமுறை கொண்டதாகவும், பார்ப்பன கடப்பாறையை கொண்டு திராவிட இருப்பை தகர்ப்பேன் என்று கூறுவது அரசியல் கட்சிகளுக்கு எதிரான கருத்துகள் போல் தெரியவில்லை , திமுக என்ற அரசியல் கட்சியை அவர் எதிர்க்கலாம் அரசியல் கட்சிக்கு எதிராக பேசப்படும் கருத்துகளுக்கு எங்களுக்கு முரண்பாடு கிடையாது. 

ஆனால் விடுதலை சிறுத்தைகள் போன்ற இயக்கங்களும் பின்பற்றும் அரசியலை யாருடனோ கூட்டுச்சேர்ந்து எதிர்க்க போகிறார் என்ற கேள்வி உள்ளது.  தமிழ் தேசிய தேசிய கடப்பாரையை கொண்டு திராவிடத்தை தகர்ப்பேன் என்று கூறுவதில் எந்த விதமான முரண்பாடுகள் கிடையாது, ஆனால் பிராமண கடப்பாறையை கொண்டு திமுக இடிப்பேன் என்று கூறுவது தான் யாரென்று நாட்டு மக்களுக்கு உணர்த்துவதாக தான் உள்ளது.  

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் பேச்சு அவருடைய எதிர்காலத் திட்டங்கள் அல்லது தமிழக மக்களின் நலன் அவர் உள்வாங்கியுள்ள தலைவர்களின் கருத்தியல் குறித்து எந்த மேடையிலும் இதுவரை பேசியதில்லை, ஒரு கட்சி மீதான வெறுப்பு மட்டும் தான் பேசி வருகிறார். இது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸின் செயல் திட்டமாகும். இந்த நிலைபாடுகளில் இருந்து தான் என்னுடைய கருத்தை முன்வைத்துள்ளேன். 

பாஜகவினர் கையில் வைத்துள்ள வேலுக்கும் நாங்கள் கையில் எடுத்துள்ள வேலுக்கும் பல்வேறு வித்தியாசங்கள் உள்ளது. அவர்கள் சனாதனத்தை அடிப்படையாக கொண்டதாகவும் நாங்கள் கையில் ஏந்தி உள்ள வேலாயுதம் என்பது சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டது எங்கள்  வேல் சனாதனத்தை குத்தி கிழிக்கும்” எனவும் அவர் பேசியுள்ளார். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.