சம வேலைக்கு சம ஊதியம் என இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நேற்று 19 வைத்து நாளாக எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் போராட்டத்தில் இருந்த சில ஆசிரியர்களை போலீசார் குண்டுக்கட்டாக வாகனத்தில் ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது ஆசிரியர்கள் மக்கள் ஆட்சியில் போராட கூட அனுமதி கிடையாதா? என போலீசாரை நோக்கி கேள்வி எழுப்பினர்.
அதனை தொடர்ந்து பேசிய ஆசிரியர்கள் ‘எங்கள் கோரிக்கை நிறைவேற்ற எத்தனை மாதங்கள் ஆனாலும் நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். எங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் தான் கேட்கிறோம். அரசு ஊழியர்களை அலைக்கழிப்பது ஜனநாயக படுகொலை. நங்கள் பொங்கல் பண்டிகைக்கு கூட சொந்த ஊருக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபடுவோம். எங்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை இல்லை’ என தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து இன்று காலை 11 மணியளவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முகாம் அலுவலகத்தில் இடைநிலை ஆசிரியர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சந்திப்பை முடித்து வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் உயர்த்தப்படுவதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய அன்பில் மகேஷ் “இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் எனது இதயத்தை கனக்க செய்துள்ளது.
மேலும் முதலமைச்சரும் பொங்கல் திருநாள் அன்று இடைநிலை ஆசிரியர்கள் போராடுவதை விரும்பவில்லை. எனவே இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் 2,500 ரூபாய் உயர்த்தப்பட்டு 15,000 வழங்கப்படும். இடைநிலை ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். அதனை தொடர்ந்து இனிமேல் மே மாதத்திற்கான சம்பளம் தொகையும் வழங்கப்படும்” என தெரிவித்தார்.அதுமட்டுமல்லாமல் பணியின் போது போது இறந்த 200 இடைநிலை ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.