தமிழக அரசியலில் கட்சி மாறுதலும், இடைத்தேர்தல் வெற்றியும் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்யபாமா ஆகியோர், தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை 20 நாட்களுக்குள் ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதையடுத்து, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அக்டோபர் 6-ம் தேதி இரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று முடிவுகள் வெளியாகின. மதுராந்தகம் தொகுதியில் சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றுள்ளார். தாராபுரம் தொகுதியில் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா வெற்றி பெற்றுள்ளார்.
இடைத்தேர்தல் களம் ஐந்து முனைப் போட்டியாக இருக்கும் என முன்கூட்டியே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உண்மையான போட்டி த.வெ.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் இடையேதான் நிலவியது. சட்டமன்றத் தேர்தலில் தனது கோட்டையாகக் கருதிய தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக, இந்த இடைத்தேர்தலில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.
த.வெ.க. கூட்டணியில் கட்சிகள் களமிறங்கியபோதே, மதுராந்தகம் தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தது. தற்போது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவின்றி, த.வெ.க. தனித்துப் போட்டியிட்டபோதிலும் இரு தொகுதிகளிலும் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது ஒருபுறம் த.வெ.க.வின் தனித்த பலத்தை நிரூபிப்பதாக அமைந்தாலும், ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாதது தி.மு.க.வுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
2026 பொதுத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஆகிய இரண்டிலும் தோல்வியை தழுவிய திமுக கட்சியில் சில மாற்றங்களை மேற்கொள்ளும் என சொல்லப்படுகிறது. காரணம் பொது தேர்தல் முடிவுக்கு பின்னர் இந்த முடிவுக்கு வந்தது. ஆனால் அடுத்த கட்ட செயல்கள் எதுவும் இல்லை, தற்போது அதை பரிசீலிக்கலாம் என சொல்லப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி 32 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது. 73 இடங்களை மட்டுமே பெற்ற திமுக கூட்டணியின் தோல்வி, பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. திமுக வேட்பாளர்கள் போட்டியிட்ட 164 தொகுதிகளில் 59 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றனர். அதாவது, சுமார் 64 விழுக்காடு தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர். பெரும்பாலான தொகுதிகளில் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்ததும் கவனிக்கத்தக்கது.
இந்த நிலையில், தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய 36 முக்கிய நிர்வாகிகள் அடங்கிய 19 குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுவினர் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 476 பக்க அறிக்கை, கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் கட்சியில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 22, 2026 அன்று காலை 10 மணிக்கு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
தேர்தலில் மோசமாகச் செயல்பட்ட பகுதிகளில் மாவட்டச் செயலாளர்களை மாற்றவும் திமுக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது, கட்சியில் மாவட்டச் செயலாளர் பதவி அதிக அதிகாரம் கொண்டதாகக் கருதப்படுகிறது.
பல ஆண்டுகளாக இப்பதவியில் இருந்துகொண்டு, கட்சியின் வளர்ச்சிக்காகத் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படாதவர்களுக்கு மாநில அளவிலான பொறுப்புகளை வழங்கி, மாவட்ட அளவிலான பொறுப்புகளில் இருந்து மாற்றிவிட்டு, இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்