நடக்கவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு நேற்று காரைக்குடி தொகுதியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். “பிரச்சார களத்தில் நின்றவர் என்பதால் பாதுகாப்பு குறைபாடு பற்றி விஜய்க்கு தான் தெரியும். தேர்தல் ஆணையம் என்ன காரணம் சொல்கிறது என்று தெரியவில்லை. 5 பிரிவுகளின் கீழ் வழக்கு என்றால் காரணம் சொல்லி இருக்க வேண்டும். நான் போலீசிடம் பாதுகாப்பு கேட்பது இல்லை. பாதுகாப்பில் என்ன குறைபாடு என்று விஜய் தான் சொல்ல வேண்டும்” என்று தவெக-வின் பிரசாரத்தின் போது அரசு சரியான பாதுகாப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு கருது தெரிவித்தார் சீமான்.
“பா.ஜ.க-விற்கு மெயின் டீம் திமுக தான். தேர்தல் நேரத்தில் இஸ்லாமிய, கிறிஸ்துவர்கள் வாக்கை தக்க வைக்க எல்லாரையும் பி டீம் என்று சொல்லும். எங்கள் கட்சியில் உள்ளவர்கள் இந்துக்கள் தான் என்று சொன்னது யார். தமிழகத்தில் ஆழமாக வேர் ஊன்ற வைத்த கட்சி எது. எச்.ராஜாவை சட்டமன்றத்திற்கு அழைத்து சென்றது யார்? வாஜ்பாய் ஆட்சியை 5 ஆண்டுகள் நிலையாக இருக்க செய்தது திமுக தான். எல்லாரும் பா.ஜ.க. பி டீம் என்றால் பா.ஜ.க.வின் ஏ டீம் திமுக தான்” என்றும் கட்டமாக பேசி இருந்தார்.
அதையடுத்து தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பேசிய சீமான் “வாக்குறுதிகள் என்று சொல்ல கூடாது. இலவச அறிவிப்புகளை தந்து உள்ளார். தரமான கல்வி, சரியான மருத்துவம், நல்ல குடிநீர் இலவசமாக தருகிறேன். சாலை வசதி, மின்சாரம், போக்குவரத்து, கியாஸ் சிலிண்டர்களை உற்பத்தி செய்து தருகிறேன். இவை தான் வாக்குறுதி. மற்றவர்கள் சொன்னது வெற்று அறிவிப்புகள்” என்றும் குறிப்பிட்டார். அடுத்து கல்வி கடன் குறித்து பேசிய அவர் “கடன் தருவதற்கு வட்டிக்கடையா நடத்துகிறீர்கள். மாணவர்களுக்கு கடன் தந்து படிக்க வைப்பதா, வேலை இல்லாதவர்களுக்கு ரூ 4 ஆயிரம், வேலை தர முயற்சிக்க வேண்டும். எல்லாவற்றையும் எப்படி தருவீர்கள், தருவதாக கூறியதற்கு எப்படி எடுப்பீர்கள்? நாட்டை தந்து விடுவீர்களா?இழந்த மனத்தை தந்து விடுவீர்களா? இழந்த உயிர்களை திருப்பி தருவீர்களா? 6 லட்சம் பேரின் தாலியை அறுத்து விட்டு குடும்பத்திற்கு ரூ.2 ஆயிரம்.
தவெக குறித்த கேள்விகளுக்கு “திமுகவை ஒழிக்க வேண்டும் என்று சொல்கின்றனர். ஏன் ஒழிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். கொள்கை எதிரி என்றால் கொள்கை என்ன சொல்லு. நாட்டு மக்களை குடிக்கார சமூகமாக மாற்றிய குற்ற சமூகமாக உள்ளது. 2 வய்து குழந்தையை பாலியல் செய்து கொல்கிறான். மன நோயாளி போல் குடி நோயாளியாக ஆக்கிவிட்டனர். டாஸ்மாக் கடைகளை மூடுவேன் என விஜய் சொல்ல வேண்டும். மது கடையை திறந்து வைத்து விட்டு நாட்டில் சட்டம்-ஒழுங்கு, நேர்மை பற்றி பேசுவது பைத்தியக்காரத்தனம். பெண்களுக்கு பாதுகாப்பு பேசி பயன் இல்லை” என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
மேலும் “நாட்டில் 2000க்கும் 2500க்கும் இடையே போட்டி. நாட்டு மக்கள் சாபம் வாங்கி வந்தவர்கள்” என்றும் தற்போதைய தேர்தல் களத்தை விமர்ச்சித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.