"சொல் தமிழா சொல்" தமிழ் பேராயம் நடத்திய, மண்டலா அளவிலான பேச்சு போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி இன்று "srm பல்கலைக்கழகத்தில்" நடைபெற்று வருகிறது அதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாணவர்களிடையே பேசும் போது.
தாய்மொழியில் புலமை பெற்ற ஒருவன் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம், தமிழர் எந்த மொழியையும் கற்று கொள்வோம் நாங்கள் வாழவேண்டும் என்றால் மட்டும், மற்றவர்களுக்கு மொழி என்பது வெறும் தொடர்பு கருவி ஆனால் தமிழனுக்கு மொழி என்பது உயிர் என்கிறார்.
"தமிழுக்கு அமுதென்று பேர்" என்ற பாரதிதாசனின் வரிகளை மேற்கோள்காட்டி, உலகத்தில் வேறு எந்த மொழியையாவது தங்களின் பெயர்களில், யாரவது சேர்த்து கொள்கிறார்களா ஆனால் தமிழன் மட்டும் தான் தன்னுடைய மொழியை தன் பெயராகவோ அல்லது தன் பெயருக்கு முன்னாலோ வைத்து கொள்கிறான்.
மற்ற மொழிக்காரர்கள் தமிழை பிசாசு மொழி, நாகரிகம் தெரியாதவர்கள் மொழி என்று குறை சொன்னபோதும், தமிழன் " யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று அனைத்து மொழிகளுக்கும் மதிப்பு கொடுத்தவர்கள் என்றும் அகம், புறம் என வாழ்வியலை பிரித்து கூறியவர் என்றும் சிறப்பித்துள்ளார்.
ஆங்கிலம் ஆங்கிலம் என்கிறீர்களே அந்த ஆங்கிலம், இயேசு தோன்றி ஐநூறு ஆண்டுகளுக்கு பின் தோன்றிய மொழி என்றும் ஆனால் தமிழின், தொன்மையான இலக்கணமான தொல்காப்பியம், இயேசு தோன்றுவதற்கு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னரே இருந்தது எனவும் தமிழின் சிறப்பை பேசியிருக்கிறார் சீமான்.
உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கும், வேர்ச்சொற்களை கொடுத்தது தமிழ் மொழி தான் என்றும், தமிழ் இல்லை என்றல் அந்த மொழிகள் இல்லை என்றும் பேசியிருக்கிறார் சீமான்.
தாய்மொழியை காத்தல் மட்டும் அவருடைய இனத்தையும் காக்க முடியும், எனவே அவர் அவர் தாய்மொழியை அவர் அவர் காத்துக்கொள்ளுங்கள் என்றார். மேலும் உலகிற்கு திருக்குறளை தந்தது தமிழ் மொழி.உலகத்தில் உள்ள மற்ற நாட்டு மக்கள் எல்லாம் தமிழை கற்றுக்கொள்ள வேண்டும் என ஆர்வம் காட்டுகின்றனர்.
தமிழின் மீதும் தமிழ் கலாச்சாரத்தின், மீதும் பற்றோடு இருக்கின்றனர், உலகின் முதல் மொழியான தமிழ் இருக்கும் நாடான இந்தியாவில் நான் பிறந்ததற்கு பெறுமைப்படுகிறேன், என பிரிதமர் கூறியதையும். பிரதமர் எந்த நாட்டிற்கு சென்றாலும் அங்கு தமிழை பற்றி பேசுவது பெருமையாக இருக்கிறது எனவும் தமிழை பிரதமர் உயர்த்தி பிடிக்கிறார் நாவும் புகழாரம், சூட்டுகிறார் சீமான்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்