தூத்துக்குடியை அதிர வைத்த மரணம்.. விடாமல் போராடிய மனைவி - 24 ஆண்டுகளுக்கு பின் கூண்டோடு சிக்கிய போலீசார்!

உதவி ஆய்வாளராக இருந்த ராமகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் லாக்கப்பில் வைத்துள்ளனர்.
Tuticorin Vincent murder news
Tuticorin Vincent murder news
Published on
Updated on
2 min read

தூத்துக்குடியில் கடந்த (18.9.1999)ஆம் ஆண்டு தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை கைதி, வின்சென்ட் என்பவர் உயிரிழந்தது தொடர்பான, வழக்கில் தற்போது டிஎஸ்பி ஆக பணிபுரிந்து வரும் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஒன்பது காவலர்களுக்கு, ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும், விதித்து இரண்டு காவலர்கள் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்.

தூத்துக்குடி, அருகே உள்ள மேல அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்தவர், வின்சென்ட் உப்பள தொழிலாளி, இவரை கடந்த (17/ 9 /1999) அன்று வழக்கு விசாரணை ஒன்றிற்காக, தாளமுத்து நகர் காவல் நிலையத்திற்கு அப்போது, உதவி ஆய்வாளராக இருந்த ராமகிருஷ்ணன் தலைமையிலான காவல்துறையினர் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் லாக்கப்பில் வைத்துள்ளனர்.

விசாரணைக்கு அழைத்து சென்ற, மறுநாளே (18 /9/1999) ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் வைத்து வின்சென்ட் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார், இதைத்தொடர்ந்து வின்சென்ட் இன் மனைவி கிருஷ்ணம்மாள், தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் இருந்த காவல்துறையினர் தனது கணவரை அடித்து கொலை செய்து விட்டதாக புகார் அளித்தார், இதைத்தொடர்ந்து ஆர்டிஓ தலைமையில் விசாரணை நடைபெற்று இந்த லாக்கப் மரணம் தொடர்பாக காவலர்கள் மொத்தம் பதினோரு பேர் மீது (1. சோமசுந்தரம், 2.ஜெயசேகரன், 3.ஜோசப் ராஜ், 4.பிச்சையா, 5.செல்லதுரை, 6.வீரபாகு, 7.சிவசுப்பிரமணியன், 8.சுப்பையா, 9.ரத்தினசாமி, 10.பாலசுப்பிரமணியன், 11. உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன்) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண் ஒன்றில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி, தாண்டவன் இந்த வழக்கில் தொடர்புடைய 11 வது குற்றவாளியான தற்போது, ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியாக உள்ள ராமகிருஷ்ணன் மற்றும் ஒன்னாவது நபர் தற்போது நில அபகரிப்பு பிரிவில் ஆய்வாளராக உள்ள சோமசுந்தரம், ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் ஜெய சேகரன், ஓய்வு பெற்ற காவலர் ஜோசப்ராஜ் , தற்போது உதவி ஆய்வாளராக உள்ள பிச்சையா, ஓய்வு பெற்ற காவலர் செல்லதுரை, ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வீரபாகு ,ஓய்வு பெற்ற காவலர் சுப்பையா, ஓய்வு பெற்ற காவலர் பாலசுப்பிரமணியம் ஆகிய 9 பேருக்கு ஆயுள் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஏழாவது நபரான ஓய்வு பெற்ற காவலர் சிவசுப்பிரமணியன் மற்றும் ஒன்பதாவது நபர் ஆன இரத்தினசாமி ஓய்வு பெற்ற காவலர் ஆகியோரை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தார்.

தூத்துக்குடியில் 24 ஆண்டுகளுக்கு பின்பு காவல் நிலையத்தில் வின்சென்ட் என்பவர் மரணம் அடைந்த வழக்கில், காவல்துறையினர் ஒன்பது பேருக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இந்த வழக்கை குறித்து அரசு வழக்கறிங்கர்,ஆனந்த் கேப்ரியல் அவர்கள் பேட்டி கொடுத்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com