"பிக்பாஸ்-க்கு அரசியல் சாயம் பூசி விட்டால்.." - ஓப்பானாக பேசிய சீனு ராமசாமி! 
தமிழ்நாடு

"பிக்பாஸ்-க்கு அரசியல் சாயம் பூசி விட்டால்.." - விஜய் சேதுபதி சர்ச்சையில் ஓப்பானாக பேசிய சீனு ராமசாமி!

"ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் சொல்லப்படும் ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு இவ்வளவு சீரியஸாக ரியாக்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை.." - சீனு ராமசாமி

மாலை முரசு செய்தி குழு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகச் செயல்படும் நடிகர் விஜய் சேதுபதி, சமீபத்தில் தலைமைப் பண்பு பற்றி பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

தவெக கட்சியின் ஆதரவாளர்கள் அந்தக் கருத்துகள் முதலமைச்சர் விஜய்யை மறைமுகமாகத் தாக்குவதாகக் கருதினர். இணையத்தில் விஜய் சேதுபதிக்கு எதிராகப் பதிவுகள் குவிந்தன.

இந்த நிலையில், இயக்குநர் சீனு ராமசாமி விஜய் சேதுபதிக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதியுடன் தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, மாமனிதன் ஆகிய படங்களில் பணியாற்றியவர் சீனு ராமசாமி.

எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விஜய் சேதுபதியை உள்ளும் புறமும் நன்கறிவேன். எதையும் நேர்படக் கண்களைப் பார்த்துச் சொல்லக்கூடிய மனிதர்; மறைந்திருந்து தாக்கும் குணம் கொண்டவர் அல்ல.

உண்மையில் தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை மக்கள் அதிகமாக பார்க்கிறார்கள்.

மற்ற ஓடிடி, சினிமா, இணையதள செயல்பாடுகள் எல்லாம் சட்டசபை காலங்களிலே மந்தமாகிவிட்டது, இதுதான் உண்மை. பிக்பாஸ் நிகழ்ச்சியை கொஞ்சம் அரசியல் சாயம் பூசி விட்டால் மக்களின் கவனத்தை பெற்று விடலாம் என்று அதை நடத்துபவர்கள் நினைத்திருக்கலாம்.

ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் சொல்லப்படும் ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு இவ்வளவு சீரியஸாக ரியாக்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன்.

அதை வைத்து அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

இன்று இந்தியா முழுக்க நன்கறிந்த பெருமைக்குரிய கலைஞன் சேது. புதியவர்களை ஊக்கப்படுத்த பல படங்களில் கெஸ்ட் ரோல் நடித்தவர், தனக்குப் பிடித்த பெரிய நடிகர்களின் படங்களிலே இமேஜ் பார்க்காமல் வில்லனாகவும் நடித்தவர், நிறைய புதிய இயக்குனர்களோடு பயணித்தவர், 100 மூத்த திரைத் தொழிலாளர்களுக்கு 100 சவரன் தங்கம் தந்தவர், பல படங்கள் சிக்கலில் இருந்தபோது தன் சம்பளத்தை விட்டுக்கொடுத்து உதவியவர்.

முன்பின் தெரியாத பலருக்கும் நன்மைகள் செய்த மனிதன் விஜய் சேதுபதி. ஆகவே அவசரப்பட்டு தனிப்பட்ட முறையில் அவரை யாரும் தாக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்." எனக் கூறியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்