தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் தேர்தல் முடிவதற்குள் தமிழ்நாடு ஒரு வழி ஆகிவிடும் என்பது தான் உண்மை. திமுக -கூட்டணிக்குள் சலசலப்பு இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அரசியல் செய்து வருகின்றனர். ஆனால் அதிமுக -வின் நிலை அப்படி இல்லை. பாஜக உடன் கூட்டணி வைத்ததில் இருந்தே பஞ்சாயத்துதான். மேலும் எடப்பாடி உள்கட்சி ஜனநாயகத்தை பாதுகாக்கததால்தான் கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் எல்லாம் கழன்று விட்டனர். அதற்கு காரணம் சமீபத்தில் நடந்த செங்கோட்டையனின் நீக்கம். ஏற்கனவே இருவருக்கும் முரண்கள் இருந்தாலும், ‘பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும்’ என எடப்பாடிக்கு கெடு விதித்திருந்தார். உடனே செங்கோட்டையனின் கட்சி பதவி பறிக்கப்பட்டது.
இந்நிலையில் கட்சியின் விதிகளுக்கு மாறாக, செயல்பட்ட ஓபிஎஸ் உடன் சேர்ந்து தேவர் குரு பூஜைக்கு சென்றதாகக் கூறி, கட்சியில் 50 ஆண்டுகால சீனியரான செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். உண்மையில் இபிஎஸ் எப்படி சமாளிக்க போகிறார் எனும் பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் ஒபிஸ் -ம் தனது ஆட்டத்தை தனது பங்குக்கு துவங்கினார்.
சின்ன ரீவைன்டர்
அதிமுக எப்போது எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டுக்குள் சென்றதோ அப்போதிலிருந்து ஓபிஎஸ் தனது மவுசை இழந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் தனது ஆதரவாளர்களை திரட்டி "அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு" என்ற பெயரில் தனிக்குழு அமைத்து செயல்பட்டு வருகிறார் ஓபிஎஸ்.
அதிமுகவில் இருந்தாலும் கடந்த பல ஆண்டுகளாக பாஜகவுடன் ஓ.பன்னீர்செல்வம் மிகவும் நெருக்கம் காட்டி வந்தார். தனது அரசியல் பிதாமகராகவே பிரதமர் மோடியை நினைத்துக்கொண்டார். அதாவது பிரதமர் கூறியதால்தான் துணை முதல்வர் பொறுப்பை ஏற்றேன் என்று சொல்லும் அளவுக்கு மோடிக்கும் அவருக்கும் நெருக்கம் இருந்தது. இதனிடையே எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பு வகிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் 2022ஆம் ஆண்டு கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்கு எதிராகவும், அதிமுக உள்விவகாரங்கள் குறித்தும் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்குகள் இன்னும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில்தான் இருக்கிறது. அரசியல் ரீதியான பிரச்சனையை அரசியல் ரீதியாக தீர்க்காமல் சட்ட போராட்டத்தில் ஈடுபட்டது பன்னீர் செல்வத்துக்கு பொருளாதார ரீதியான நஷ்டத்தை ஏற்படுத்தியது நாடறிந்த உண்மை.
பாஜக -வை தீவிரமாக ஆதரித்து வந்த ஓபிஎஸ் தரப்பு திடீரென பாஜக எதிர்ப்பை நிலைநாட்டியதன் காரணம், NDA கூட்டணியில் இருந்து அவர் விலக்கப்பட்டதால் தான் என பேசப்பட்டது. அதனை உறுதி செய்யும் விதமாக, சில மாதத்திற்கு முன்னர் பாஜக கூட்டணியிலிருந்து ஓபிஎஸ் தலைமையிலான அணி விலகுவதாக முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்தார்.
கூட்டணியில் விலகிய அன்றே முதல்வர் ஸ்டாலினை அடையாற்றில் உள்ள முதல்வர் இல்லத்திலேயே சென்று சந்தித்தார். சந்தித்துவிட்டு வந்த பிறகு, ‘அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பரும் இல்லை’ என பேசியிருந்தார்.
இதற்கிடையில் தான் ஓபிஎஸ், செங்கோட்டையன், சசிகலா, டிடிவி (அதிமுக -விலிருந்து நீக்கப்பட்டவர்கள்) ஆகியோர் இணைந்து முக்குலத்தோர் கூட்டணியை உருவாக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இதற்கிடையில் செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்துவிட்டார். செங்கோட்டையனின் இந்த செயல் எடப்பாடியை மிகவும் பாதிதாக சொல்லப்படுகிறது.
விஜய்யின் வியூகம்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு தற்போதுதான், மீண்டும் மக்களை சந்திக்க துவங்கியுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் ஈரோட்டில் நடந்த மக்கள் சந்திப்பை செங்கோட்டையந்தான் ஒருங்கிணைத்தார்.அதிமுக -விலிருந்து வந்தபிறகு இவர் நடத்தும் முதல் வேலை என்பதால் இதற்கு பெரும் எதிர்பார்ப்புகள் உருவாயின. மேலும் நேற்றைய தினம் விஜய் மிகக்கடுமையாக திமுக -வை சாடியதோடு, அதிமுக முன்னாள் தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் குறித்தும் பேசியிருந்தார் அவர் பேசியதாவது,
பலமுறை ஜெயலலிதா மேடமும், எம்.ஜி.ஆர் -ம் ‘திமுக -ஒரு தீய சக்தி’ னு சொல்லி கேட்டிருக்கேன். அப்போல்லாம் யோசிச்சதுண்டு, ஏன் இவ்வளவு கோவமா பேசுறாங்கனு, இப்போல புரியுது.. அனா இப்போ சொல்றேன் ‘திமுக ஒரு தீய சக்தி, தீய சக்தி, தீய சக்தி..” அதை எதிர்க்க வந்த நாம் தூய சக்தி” என பேசியிருந்தார்.
ஜெயலலிதா தனது பரப்புரைகளில் அதிகமாக பயன்படுத்திய சொற்பதம் “திமுக ஒரு தீய சக்தி” இதையே விஜயும் இன்று கையிலெடுத்திருப்பது கவனிக்கக்கக்து .
மேலும், விஜய் இம்முறை கடுமையாக திமுக -வை சாடியிருந்தார், மேலும் பாஜக -வை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் திமுக -விற்கு பெரும் அச்சுறுத்தலாக விஜய் உருவெடுத்திருந்தாலும் இதுவரை எப்போதுமே செய்யாத ஒரு காரியத்தை விஜய் செய்திருக்கிறார். கடந்த எந்த கூட்டத்திலும் விஜய் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரை குறிப்பிடவில்லை. ஆனால் இம்முறை ஜெயலலிதா -வின் பெயரை குறிப்பிட்டு, அவரின் மிகவும் பிரபலமான “திமுக ஒரு ஒரு தீய சக்தி, சொன்னீர்களே? செய்தீர்களா?” உள்ளிட்ட சொற்பதங்களை கையிலெடுத்து உள்ளார்.
ஏற்கனவே அதிமுக வலுவிழந்து உள்ளது. கட்சியின் மூத்த நபரான செங்கோட்டையனும் விஜயுடன் சென்றுவிட்டார், ஆரம்பத்திலிருந்தே விஜய் அதிமுக -வாக்குகளை விழுங்குவார் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால், தற்போது எம்.ஜி.ஆர், அண்ணா, ஜெயலலிதா ஆகியோரை தமிழகத்தின் சொத்து யாரும் சொந்தம் கொண்டாட முடியாது எனக்கூறி அதிமுக -வின் மாற்றாக விஜய் வளருகிறாரோ என தோன்றுவதாக சில விமர்சகர்கள் தெரிவித்து உள்ளனர்.
நிகழ்ச்சியின் முடிவில் விஜய் -க்கு செங்கோட்டையன் செங்கோல் வழங்கி சிறப்பித்தார்.
இந்தநிலையில்தான் இன்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-டம் தவெக -வில் செங்கோட்டையன் உள்ளாரே என கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு “இருக்கட்டும்… என்ன ஏன் வம்புல இழுக்குறீங்க” என சிரித்துக்கொண்டே நகர்ந்துவிட்டார்.
செங்கோட்டையன் உடன் ஓபிஎஸ் -ம் தமிழக வெற்றி கழகத்துக்கு செல்வார் என பேச்சுக்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.