Tamil Nadu Assembly 
தமிழ்நாடு

"நாங்களும் எந்திரிக்கலாமா அப்போ?" - அமைச்சர் ஆதவ் பேச்சால் 'டென்ஷன்' ஆன சபாநாயகர்! காரசார விவாதத்திற்கு நடுவே குழப்பம்

"பொதுப்பணித்துறை அமைச்சர் கூறியது தவறு, உட்கார சொல்லுங்கள்" என்று கட்டமாக கட்டளைகளை விதித்தார்.

Vinvizhi Leninton

இன்றுடன் சட்டப்பேரவை நிறுவடையும் நிலையில் 8 மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் நேற்று முதல்வர் விஜய் பேசியது குறித்து எ.வ. வேலு தங்களது நிலைப்பாட்டினை குறித்து விளக்கினார். மேலும், எ.வ. வேலு முதல்வர் பேசியதை நீக்கணும்`

நீதிமன்ற விசாரணையில் இருக்கும் வழக்குகள் குறித்து முதல்வர் பேசியிருக்கிறார். பலமுறை இதே மன்றத்தில் பேசப்பட்ட சர்க்காரிய அறிக்கை குறித்தும் அவதூறாக பேசியிருக்கார் என்று கூறியதோடு, முதல்வர் ஆதாரமில்லாமல் பேசி இருக்கிறார் என்றும் காவல்துறை மானியம் தொடர்பான தகவல் தவிர்த்து, மிசா, மாறன் குறித்து பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "பேசி முடித்த பிறகு என்ன வேண்டுமானாலும் பேசுங்கள், திமுகவின் திட்டம் என்னவென்றால் அவர்கள் பேசுவதை நாம் கேட்க வேண்டும், ஆனால் நாம் பேசும்போது அவர்கள் கேட்கவே மாட்டார்கள் சத்தம் போட்டுக்கொண்டே இருப்பார்கள். இப்போது கூட நேரு அண்ணன் சொல்கிறார், நாங்க பேசுறோம் நாங்க பேசுறோம் என்று ஆனால் நாம் பேசும்போது சத்தம்போட்டுக்கொண்டே இருப்பார்கள். முன்னாள் அமைச்சர் வேலு அவர்களுக்கு பதில் சொல்லிக்கொள்கிறேன், அவர் தான் சொன்னாரு.." என்று ஆதவ் அர்ஜுனா பேசிக்கொண்டிருந்த போது திமுகவினர் தங்களது இருக்கையில் இருந்து எழுந்து நின்று அமளியில் ஈடுபட தொடங்கினர். அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "நாங்களும் எந்திரிக்கலாமா அப்போ?" என்று பதில் கேள்வியினை திமுகவினரை நோக்கி வைத்தார்.

அப்போது அவையில் இன்னும் அமளி அதிகரிக்க தொடங்கியது. உடனடியாக நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர சபாநாயகர், "வேண்டாம்.. வேண்டாம்" என்று கூறத்தொடங்கினார். மேலும், அது தவறு "நோ" என்று சற்று கோபத்துடன் கூறத்தொடங்கினார். இதனையடுத்து, "பொதுப்பணித்துறை அமைச்சர் கூறியது தவறு, உட்கார சொல்லுங்கள்" என்று கட்டமாக கட்டளைகளை விதித்தார். ஆளும்கட்சியாக இருப்பவர்களுக்கே அதிக பொறுப்பிருப்பதாகவும் பொறுப்புடன் நடக்கவேண்டும் என்றும் அவைத்தலைவர் கூறினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்