Jana-Nayagan-Parasakathi-Vijay-Sivakarthikeya 
தமிழ்நாடு

விஜய் உடன் மோதும் சிவகார்த்திகேயன்..! ஜனநாயகனை சரிக்கிறதா பராசக்தி!?

ஈரோட்டில் மக்கள் மத்தியில் பேசிய விஜய், “வள்ளுவர் கூட்டத்திற்கு காட்டும் அக்கறையை ...

மாலை முரசு செய்தி குழு

2026 தேர்தல் தமிழகத்தின் மிக முக்கியமான இதுவரை பார்க்காத ஒன்று என்பதில் சிறு சந்தேகமும் இல்லை. ஆனால் கட்சிகளின் கூட்டணி கணக்குகள் தான் மக்களை பெரிதும் அலைக்கழிக்கின்றன.. ஆளுங்கட்சியான திமுக ஆட்சிக் கட்டிலிருந்து இறங்கத் தயாராக இல்லை. அவர்களின் கூட்டணிக்குள் சலசலப்புகள் இருந்தாலும் அது இன்னும் பொதுவெளிக்கு வரவில்லை. 

சின்ன ரீவைண்ட்..!

விஜய் அரசியலில் குதிப்பார் என்று நினைத்தது இன்று நேற்றல்ல 2013 ஆம் ஆண்டு தலைவா படம் வெளியாகி “time to lead” என கேப்ஷன் வைத்து அதற்காக அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை கடுப்பேற்றி மன்னிப்பு கேட்ட விவகாரமெல்லாம் அவரின் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தின. ஆனால் அவரோ “ஓடு மீன் ஓட உறுமீன் வருமென” காத்திருந்த கொக்குபோல  காத்திருந்து அரசியலில் குதித்துள்ளார்.

அரசியல் எதிரியாக திமுக -வையும் கொள்கை எதிரியாக பாஜகவையும் முன்னிருத்திதான் அரசியல் பயணத்தை துவங்கியுள்ளார். கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர்க வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 42-பேர் உயிரிழந்துவிட்டனர்.  இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனாலும்,  இந்த துயர சம்பவத்திற்கு பிறகு தவெக தலைதூக்குவது கடினம் இது விஜய்க்கு நிச்சயம் பின்னடைவு என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் கரூர் சம்பவம் ஆளுங்கட்சியான திமுக -வுக்குத்தான் பின்னடைவை ஏற்படுத்தியது ஒழிய பாதிக்கப்பட்டவர்கள்  உட்பட யாரும் விஜய் மீது கோவத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனலும் அதன் பின்னர் தமிழக வெற்றி கழகம் இந்த பிரச்சனைகளில் இருந்து மீண்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும். 

துப்பாக்கிய புடிங்க சிவா!

முழுநேர அரசியலில் குதித்த பின்னர் விஜய், இனி  ‘ஜனநாயகன்’ படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்க மாட்டார் என சொல்லப்பட்டது. அவர் கடைசியாக நடித்த ‘GOAT’ படத்தில் “துப்பாக்கிய புடிங்க  சிவா” என விஜய் பேசிய வசனம் அடுத்த தலைமுறையாக சிவகார்த்திகேயனை அடையாளம் காட்டிவிட்டு சென்றாரோ விஜய் என்ற பேச்சுக்கள் எழுந்தன. 

இதற்கிடையில், தான் கரூர் சம்பவங்கள் எல்லாம் அரங்கேறி முடிந்தன.  இந்நிலையில் விஜய்யின் நடிப்பில் உருவாக்கி வரும் ஜனநாயகன் படம் வருகிற ஜனவரி 9 -ஆம் தேதி ரிலீஸ் -ஆக உள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படம் வருகிற ஜனவரி 14 -ஆம் தேதி வெளியாக உள்ளதாக திட்டமிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் பராசக்தி படத்தின் தேதிகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. மேலும் பராசக்தியம் ஜனநாயகனும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளதாக தெரிகிறது. 

மேலும் சில திங்களுக்கு முன்னர், ஈரோட்டில் மக்கள் மத்தியில் பேசிய விஜய், “வள்ளுவர் கூட்டத்திற்கு காட்டும் அக்கறையை மக்கள் மீதும் காட்டலாம்” என திமுக அரசை சாடியிருந்தார். வள்ளுவர் கோட்டத்தில்தான் “the world of பராசக்தி” என்ற பெயரில் பராசக்தியை படத்தின் படப்பிடிப்பு தளத்தை பொருட்காட்சியைக் வைத்திருந்தது படக்குழு. மொழிப்போர் காலத்தில்” இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை பற்றிய படம் என்பதால்” அங்கு காட்சி படுத்தப்பட்டிருந்தது.

இதன் மூலம் விஜய் சிவகார்த்திகேயனை சீண்டுகிறாரா என்ற பேச்சுகளும் எழுந்தன. மேலும் பராசக்தியும், ஜனநாயகனும் ஒரே நேரத்தில் வெளியானால், ஜனநாயகனுக்கு 40% வசூல் சரிவு இருக்கும் என்றும் கணிக்கப்படுவதாக சில வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.