மூன்று நாள் பயணமாக டெல்லி சென்ற தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதையடுத்து இன்று தமிழகம் திரும்பியுள்ளார். அங்கு அவர் தமிழக வளர்ச்சி குறித்தும், பெண்கள் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்தும் பேசி உள்ளார். தற்போது அது பேசு பொருளாகி உள்ளது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்து ஒரு மாதம் மட்டுமே முடிவடைந்த நிலையில் இந்த வளர்ச்சிக்கு காரணம் தற்போது உள்ள அரசு தான் என்று சொல்லி கொள்வதாக எதிர்க்கட்சி மற்றும் அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மேலும் தேர்தல் பிரசாரத்தின் போது திமுகவை விமர்சித்த விஜய், தற்போது தமிழக வளர்ச்சி குறித்து பெருமிதம் கொள்வது ஏற்புடையதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, தனது X தள பதிவில் சரமாரி கேள்விகளை முன்வைத்துள்ளார். அதில் “தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்” என்றும் “இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42% மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்” என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? என கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து “5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். “தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்” என்றும் “டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி வந்துள்ளதாக விமர்ச்சித்துள்ளார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் திராவிட அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு என்றும் விமர்ச்சித்துள்ளார். மேலும் “பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்” என்றும் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேசியவை “இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக திகழும் தமிழ்நாடு, தனது உறுதித்தன்மையையும், தொடர் வளர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறது, பெண்களின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது.மகளிர் சுய உதவிக் குழுக்களானது சமூக வளர்ச்சி மற்றும் சமூக பொருளாதார மாற்றத்திற்கான வலிமையான கருவிகளாக திகழ்கின்றன. இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் பணி செய்யும் பெண்களில் 42% பெண்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளனர். நிதிப் பொறுப்புணர்வு, சமூக முன்னேற்றம் மற்றும் மக்கள் தொகை கட்டுப்பாடு ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார். இவையெல்லாம் கடந்த ஆட்சியின் சாதனைகள் என்றும் இதற்கு தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.