2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக இறங்கியுள்ளன. பாஜக -வோடு கூட்டணி கிடையவே கிடையாதது என்று சொன்ன எடப்பாடி கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி பாஜக வோடு கூட்டணி அமைத்து தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. சென்னை, திருவள்ளூர் ஆகிய 20 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்களுடன் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய வைத்தியலிங்கம் "NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது” என பேசியிருந்தார்.
கூட்டம் முடிந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓபிஎஸ் “NDA கூட்டணி தொடர்பான நிகழ்வுக்கு அமிட்ஷா அழைக்காததில் வருத்தம் தான். நாங்கள் தற்போதுவரை NDA கூட்டணியில்தான் உள்ளோம். கூட்டணியில் தொடர்வோமா என்பது குறித்து 15 நாட்களுக்குள் தெரிவிக்கப்படும்” எனகூறியிருந்தார்.
இந்த சலசலப்பே இன்னும் அடங்காத நிலையில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோது “ஓபிஎஸ், இபிஎஸ் இருவருமே NDA கூட்டணியில்தான் இருக்கின்றனர். பிரதமர் இதயத்தில் ஓபிஎஸ் -கு தனி இடம் உண்டு.. நமது எதிரியை அழிக்க இணைந்து செயல்பட வேண்டும்” என பேசியிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.