
விழுப்புரம்; 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க நாளுக்கு நாள் தமிழக அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. கூட்டை அமைப்பது, உடைப்பது புதிய கட்சிகள் முளைப்பது என ஒவ்வொரு காட்சியிலும் ஒரே சம்பவமாகவே உள்ளது.
அந்த வரிசையில் இன்று பாமக..! 2026 தேர்தலை எதிர்கொள்வதற்காக திண்டிவனம் தைலாபுரத்தில் உள்ள தோட்டத்தில் பாமக மாவட்ட செயலாளர்களுக்கான செயற்குழு கூட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் அழைப்பு விடுத்திருந்தார். மொத்தம் உள்ள 210 நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இதில் வெறும் 10 நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொண்டனர்.
கடந்த கால மோதல்!
இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் ஆணி வேர் கடந்த டிசம்பர் 28 -ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம். இதில் இளைஞர் அணி தலைவராக ராமதாஸ் தனது மகன் வழி பேரனான முகுந்தனை நியமித்தார்.
இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த அன்பு மணி ஒரு காரணத்தை சொன்னார் “முகுந்தன் அரசியல் அனுபவம் இல்லாதவர், மேலும் கட்சியில் சேர்ந்து 4 மாதங்களே ஆகிறது. மீண்டும் மீண்டும் குடும்ப உறுப்பினர்களுக்கே பதவி தருவதை ஏற்க இயலாது” எனகூறியிருந்தார்
இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸ், “கட்சியை உருவாக்கியவன் நான், வன்னியர் சங்கத்தை உருவாக்கியவன் நான். எனவே முடிவை நான்தான் எடுப்பேன்” என மேடையிலேயே அன்புமணியிடம் கோபமாக கூறினார். அன்புமணி உடனே எழுந்து, “என்னை சந்திக்க நினைப்போர், இனி பனையூரில் உள்ள புதிய அலுவலகத்தில் என்னை சந்திக்கலாம்” என சொல்லி எழுந்துச் சென்றார்.
ஆனால் இந்த பிரச்னை ஒரு வழியாக பேசி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் கழித்து சித்திரை முழு நிலவு திருவிழாவும் நடைபெற்று முடிந்தது. ஆனால் “முக்கிய பொறுப்பில் இருந்தும் கட்சி தலைமையில் இருந்தும் தன்னிச்சையாக செயல்பட முடியாத வருத்தம் அன்புமணியிடமும் கட்சியை உருவாக்கி இவர்களை வளர்த்த பின்னர் நம்மை மீறி செயல்பட்டு விடுவாரோ என்ற ஆதங்கம் ராமதாசிடமும்இருப்பதை சித்திரை முழுநிலவு மாநாடு காண்பித்தது.
கூட்டத்தில் பேசிய ராமதாஸ் அந்தக் கூட்டணி...இந்தக் கூட்டணி.. கட்சிக்குள்ளேயே கூட்டணி.. கட்சிக்குள்ளேயே கூட்டு. இதெல்லாம் நடக்காது. உன்னை திருத்திக் கொள். இந்தக் கட்சியில் நீ பொறுப்பில் இருக்கவே முடியாது. அது யாராக இருந்தாலும் சொல்கிறேன். நானா இருக்கும் வரை கட்சியின் தலைவராக நானே இருப்பேன். நான் எடுப்பதே இறுதி முடிவு.." என சூசகமாக ராமதாசை சாடினார். இதற்கு அன்புமணி மேடையில சிரித்தபடி அமர்ந்திருந்தார்.
இச்சமபவம் கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவத்தின் மூலம் இருவரும் இன்னும் சமரசமாகவில்லை, தேர்தலுக்காகவே அமைதியாக இருந்துள்ளனர் என அப்பட்டமாக தெரிகிறது.
‘மேலும் தேர்தல் சமயத்தில் இந்த மோதல் அவசியமற்றது” என பலரும் கூறிவந்தனர்.
சொற்ப நிர்வாகிகள் மட்டுமே..!
இந்த நிலையில் தான் இன்று பாமக-ன் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. திண்டிவனம் தைலாபுர தோட்டத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில்
210 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இதில் 20 நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொண்டனர். கவுரவத்தலைவர் ஜி.கே மணியும் கலந்துகொண்டார்.
ஆனால் அன்புமணி கலந்து கொள்ளவில்லை. மேலும் அன்பு மணியிடம் இருந்த தலைவர் பதவி பறிக்கப்பட்டு செயல் தலைவராக பதவி வழங்கப்பட்டதில் கடும் அதிருப்தியில் இருப்பதாலே அவர் வரவில்லை என சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்வின்போது பேசிய ராமதாஸ் “சித்திரை திருவிழாவில் சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளை பாராட்டினேன் இதில் அன்புமணி பெயர் விடுபட்டிருக்கலாம். மேலும் பல நிர்வாகிகள் களைப்பாக இருப்பதால் வராமல்
இருக்கலாம். இந்த கட்சியில் தந்தை-மகன் கோஷ்டி மோதல் இல்லை” என பேசியிருந்தார்.
எது எப்படி இருந்தாலும் தேர்தல் சமையத்தில் இதற்கு மோதல் அவசியமற்றது. தமிழகம் முழுவதும் எல்லாம் பாமக -விற்கு ஆதரவாளர்கள் இல்லை. வன்னியர் ஸ்மூத்தில் மட்டுமே அவர்களுக்கு ஒட்டு வங்கி உள்ளது. அதுவும் இந்த உள்கட்சி விவகாரங்களால் மக்கள் குழம்பி பொய் உள்ளனர். தனது பலத்தை எல்லாம் தேர்தலில் காட்டாமல் சொந்த மகனிடம் வீணடிப்பது தேவையற்ற ஒன்று..!
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்