வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் சென்னையில் இடைவெளி விட்டு சில நாட்கள் மழை பொழிந்து வருகிறது. இன்று மீண்டும் ஒரு மழைப்பொழிவு தொடங்கியிருக்கிறது.
தீபாவளி திருநாள் முடியும் வரையிலும் சென்னைக்கு மழை இருக்கும் என ஏற்கெனவே கூறப்பட்டிருந்தது. வானிலை ஆய்வாளர்கள் சொன்னபடி, இது புயலாக இல்லாமல் சாதாரண மழைப்பொழிவாக இருக்கும்.
தீபாவளி வரையிலுமே இந்த நிலைத் தொடரும் என்று வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், "அழகான மேகப் பட்டை ஒன்று சென்னை கடற்கரையை நோக்கி நகர்கிறது. இது வழக்கமான கிழக்கு அலை மேகங்கள். ரசிக்கத்தக்க கனமழை!!! அடுத்த இரண்டு நாட்களுக்கு இதே நிலைதான் தொடரும். வெயில், பின்னர் திடீரென எங்கிருந்தோ மழை பெய்யும்." எனக் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகள் கிழக்கு அலை மேகங்களால் மிதமான மழையைப் பெற்று வருகின்றன. கடலோர மாவட்டங்கள் மட்டுமில்லாமல் உள் மாவட்டங்களும் கணிசமான மழைப் பொழிவைப் பெற்றுவருவதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.