கடந்த சில மாதங்களாகவே தமிழகம் முழுவதும் பல வீடுகள் எதிர்கொள்ளும் பிரச்சனையாக மின் கட்டண உயர்வு இருந்து வருகிறது.
திடீரென ஒரு நாளில் உங்கள் வழக்கமான மின் கட்டணத்தை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு கட்டணத்தைப் பார்ப்பது உங்களுக்கு அதிர்ச்சியளிக்கலாம். இதனால் பதட்டம் அடையாமல் அதே வேளையில் அப்படியே அந்த கட்டணத்தை செலுத்தாமல் என்ன செய்ய வேண்டும் எனப் பார்க்கலாம்.
முதலில் மின்சார கட்டணத்தை புரிந்துகொள்ள வேண்டும். மின்சாரம் யூனிட் என்ற அலகால் குறிப்பிடப்படுகிறது. ஒரு யூனிட் என்பது 1,000 watt மின்சாதனம் ஒரு மணி நேரம் இயங்கினால் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவு. 1 kilowatt-hour (kWh) என்றும் கூறுவர்.
100W மின்விசிறி 10 மணி நேரம் இயங்கினால் சுமார் 1 யூனிட் பயன்படுத்தும். ஒரு மின்சாதனத்தின் மின்திறன் (wattage) பொறுத்து அதன் மின் பயன்பாடு இருக்கும்.
பொதுவாக வாட்டர் ஹீட்டர், ஏர் கண்டிஷனர் (AC), இண்டக்ஷன் அடுப்பு, எலக்ட்ரிக் கெட்டில், வாஷிங் மெஷின், தண்ணீர் மோட்டார், மிக்ஸி / கிரைண்டர் போன்ற சாதனங்கள் அதிக மின்திறன் கொண்டவை.
தமிழ்நாட்டில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது. இரண்டு மாதங்களில் 500 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட்கள் இலவசமாகவும் 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 100 யூனிட்கள் மட்டுமே இலவசமாகவும் கொடுக்கப்படுகிறது.
அதற்கு மேல் 201-400 யூனிட்டுகள் வரை யூனிட்டுக்கு ரூ.4.7, 401–500 யூனிட்டுகள் வரை ரூ. 6.3, 501–600 யூனிட்டுகள் வரை ரூ. 8.4, 601–800 யூனிட்டுகள் வரை ரூ. 9.45, 801–1,000 யூனிட்டுகள் வரை ரூ. 10.5, 1000 யூனிட்டுக்கு மேல், ரூ. 11.55 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
உங்கள் மின்சார பயன்பாடு, இரண்டு மாதங்களில் 400 யூனிட்கள் என்றால் முதல் 200 யூனிட்டுகள் இலவம். அடுத்த 200 யூனிட்களுக்கு 200 × ரூ 4.70 என்ற வகையில் 940 ரூபாய் மின் கட்டணம் வரும்.
ஒருவேளை இரண்டு மாதங்களில் 600 யூனிட்கள் பயன்படுத்தினால் 100 யூனிட் மட்டுமே இலவம். அடுத்த 300 யூனிட்களுக்கு 300 × ரூ 4.70 = ரூ 1,410 + அடுத்த 100 × ரூ 6.30 = ரூ 630 + அடுத்த 100 × ரூ 8.40 = ரூ 840 என மொத்தமாக 2880 ரூபாய் மின் கட்டணமாக வரும்.
இப்படி கணக்கிட்டால் 500 யூனிட்களுக்கு ₹1,570 கட்டணம் வரும் நிலையில், 501 யூனிட்களுக்கு சுமார் ₹2,048 கட்டணம் வரலாம். காரணம், இலவச யூனிட்கள் 200-லிருந்து 100-ஆகக் குறைவதுதான்.
மேலும் வாசிக்க: பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி? ஆன்லைனில் விண்ணப்பிப்பது முதல் பட்டா கிடைப்பது வரை முழு விவரம்!
1. TNPDCL அதிகாரப்பூர்வ Bill Status இணையதளத்தைத் திறக்கவும். (tnebltd.gov.in/BillStatus/billstatus.)
2. உங்கள் Service Connection Number (S/C Number)-ஐ உள்ளிடவும்.
3. பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் கொடுக்கவும்.
4. திரையில் காட்டப்படும் CAPTCHA-ஐ உள்ளிடவும்.
5. Submit செய்து கிடைக்கும் bill விவரங்களைச் சரிபார்க்கவும்.
link: https://www.tnebltd.gov.in/BillStatus/billstatus.xhtml
Service Connection Number பழைய EB bill, payment receipt மற்றும் white meter card-ல் இருக்கும்.
மின்சார வாரியத்தின் 24/7 வாடிக்கையாளர் சேவை மைய எண்ணான 94987 94987-க்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம். அல்லது, அதே எண்ணிற்கு (94987 94987) வாட்ஸ்அப் (WhatsApp) மூலமாகவும் உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம்.
அல்லது 1912 என்ற EB உதவி எண்ணுக்கு போன் செய்து புகார் செய்யலாம்.
ஆன்லைனில் உங்களின் மின் அளவீடு மற்றும் கட்டணம் (Electricity reading and payment history) செலுத்திய விவரங்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும். அவற்றைப் பதிவிறக்கம் செய்து, உங்கள் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்க வேண்டும்.
முந்தைய மாதத்தின் கட்டண விவரங்களையும், தற்போதைய கட்டண விவரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து, கணக்கீட்டில் ஏதேனும் முரண்பாடுகள் (Mismatch) உள்ளனவா என்பதைச் சரிபார்க்குமாறு அதிகாரிகளிடம் கோரலாம்.
உங்கள் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள மின் அளவியின் (Meter) செயல்பாட்டில் சந்தேகம் இருந்தால், அதனைப் பரிசோதிக்கக் கோரிக்கை விடுக்கலாம். அதன்பேரில், மின்வாரிய அலுவலர் நேரில் வந்து பரிசோதிப்பார்; அதில் ஏதேனும் கோளாறு இருப்பது உறுதிசெய்யப்பட்டால் உங்களின் மின் கட்டணம் நிச்சயமாகக் குறைக்கப்படும்.
TNPDCL அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://www.tnebltd.gov.in/cgrfonline/) மின்சாரக் கட்டணம் மற்றும் meter தொடர்பான புகார்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
இந்தப் பக்கத்தில் பொதுவான புகார்கள் (electricity complaint) மற்றும் நுகர்வோர் குறைதீர்ப்பு மன்றம் (CGRF) மனு ஆகியவற்றுக்கு தனித்தனி வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
Electricity complaint வசதியைப் பயன்படுத்தி மின் கட்டணம் மற்றும் மீட்டர் தொடர்பாக புகார் அளிக்கலாம். ஏற்கெனவே அளிக்கப்பட்ட புகார்களுக்கு பதில் கிடைக்கவில்லை என்றால் CGRF-ல் குறைதீர் மனு பதிவு செய்யலாம். உங்கள் புகார் எந்த நிலையில் இருக்கிறது என்பதை புகார் எண் (Complaint number) அல்லது Petition ID-ஐப் பயன்படுத்தி அதிகாரப்பூர்வ portal-ல் status பார்க்கவும்.
5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட சாதனங்களைப் பயன்படுத்துங்கள்
தேவையில்லாத நேரத்தில் மின்விசிறி, விளக்கு போன்றவற்றை அணைக்கவும்.
ஏசியை 24–26°C வெப்பநிலையில் இயக்குங்கள், தேவையில்லாத நேரங்களில் அணைத்திடுங்கள்
ஏசி ஃபில்டரை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள்
LED பல்புகளைப் பயன்படுத்துங்கள்
ஃபிரிட்ஜை அடிக்கடி திறப்பதை தவிர்க்க வேண்டும், சூடான உணவுகளை உடனடியாக உள்ளே வைக்கக் கூடாது
ஃபிரிட்ஜின் பின்புறத்தில் போதிய காற்றோட்டம் இருக்க வேண்டும்.
பழைய மின்விசிறிகளுக்குப் பதிலாக BLDC மின்விசிறிகளைப் பயன்படுத்தலாம்.
வாஷிங் மெஷின், அயர்ன் பாக்ஸ், கீசர் போன்ற அதிக மின்திறன் கொண்ட சாதனங்களைத் தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும். ஒரே நேரத்தில் இயக்கக் கூடாது
சோலார் பேனல் மூலம் சூரிய மின்சாரத்தை பயன்படுத்தலாம்
தமிழ்நாட்டில் இரண்டு மாதங்களுக்கு எத்தனை யூனிட் மின்சாரம் இலவசம்?
இரண்டு மாதங்களில் 500 யூனிட்கள் வரை பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட்கள் இலவசமாகவும் 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 100 யூனிட்கள் மட்டுமே இலவசமாகவும் கொடுக்கப்படுகிறது.
திடீரென மின்கட்டணம் இரண்டு மடங்கு அதிகரிக்கக் காரணம் என்ன?
வழக்கத்தைவிட அதிக நேரம் ஏசி பயன்படுத்துவது.
கீசர், இண்டக்ஷன் அடுப்பு போன்ற சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பது.
மின்சார மீட்டர் ரீடிங் தாமதமாக எடுக்கப்படுவது.
முந்தைய மாதங்களில் சராசரி அளவீட்டில் கணக்கிடப்பட்டு, பின்னர் உண்மையான அளவீடு எடுக்கப்படுவது.
மீட்டர் கோளாறு அல்லது கணக்கீட்டுப் பிழை.
500 யூனிட் இலவச மின்சாரச் சலுகை வரம்பைக் கடப்பது.
மின்சார மீட்டர் athikஅதிகமாக ஓடுகிறதா என்பதை எப்படிக் கண்டறிவது?
வீட்டில் உள்ள அனைத்து மின்சாதனங்களையும் அணைத்துவிட்டு மின்சார மீட்டரில் யூனிட் பயன்பாடு தொடர்ந்து அதிகரிக்கிறதா எனக் கவனிக்கவும். சாதனங்கள் அனைத்தும் அணைக்கப்பட்ட நிலையிலும் மீட்டர் தொடர்ந்து இயங்கினால், மின்வாரியத்திடம் புகார் அளிக்கவும்.
அதிக மின்கட்டணம் வந்தால் எந்த எண்ணில் புகார் அளிக்க வேண்டும்?
மின்சார வாரியத்தின் 24/7 வாடிக்கையாளர் சேவை மைய எண்ணான 94987 94987-க்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம். அல்லது, அதே எண்ணிற்கு (94987 94987) வாட்ஸ்அப் (WhatsApp) மூலமாகவும் உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம்.
அல்லது 1912 என்ற EB உதவி எண்ணுக்கு போன் செய்து புகார் செய்யலாம்.
5. மின்சாரக் கட்டணப் புகாருக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் எங்கு மேல்முறையீடு செய்வது?
மின்கட்டணம் தொடர்பாக மின்வாரியத்தின் உள்ளூர் அலுவலகத்தில் புகார் அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை என்றால், அடுத்ததாக உங்கள் மின்பகிர்மான வட்டத்தில் செயல்படும் நுகர்வோர் குறைதீர் மன்றத்தை (Consumer Grievance Redressal Forum – CGRF) அணுகலாம்.
ஆன்லைனில் TNPDCL அதிகாரப்பூர்வ இணையதளத்தில் CGRF-ல் குறைதீர் மனு பதிவு செய்யலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.