பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி? ஆன்லைனில் விண்ணப்பிப்பது முதல் பட்டா கிடைப்பது வரை முழு விவரம்!

தமிழ்நாட்டில் பட்டா பெயர் மாற்ற விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், நிராகரிப்பு உத்தரவிலேயே அதற்கான காரணம் தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரருக்கு மேல் முறையீட்டுக்கான வாய்ப்பும் வழங்கப்படும்.
 How to Apply for Patta Name Transfer Online in Tamil Nadu: Complete Details and Step-by-Step Guide
பட்டா பெயர் மாற்றம் செய்வது எப்படி? ஆன்லைனில் விண்ணப்பிப்பது முதல் பட்டா கிடைப்பது வரை முழு விவரம்!AI Generated
Published on: 
Updated on: 
3 min read

பட்டா என்கிற சொல் சமஸ்கிருத மொழியில் இருந்து வந்தது. ஒரு நிலத்தை வாங்கி பத்திரப்பதிவு செய்தாலும், நிலத்தின் மீதான சட்டப்பூர்வ உரிமையை நிலைநிறுத்தும் ஆவணம் பட்டா. அதில் பெயர் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம்.

உங்கள் நிலத்தை வைத்து மோசடிகள் நடைபெருவதைத் தடுக்கவும், மறு விற்பனை செய்யவும், அரசு திட்டங்களில் பயன்பெறவும் பட்டா பெற வேண்டியது அவசியம்.

பத்திரத்தில் பெயர் மாற்றினாலே பட்டாவில் மாறிவிடது!

பலரும் பத்திரம் தங்கள் பெயரிலும், பட்டா மற்றொருவர் பெயரிலேயும் வைத்திருக்கும் தவறை செய்கின்றனர். பத்திரம் என்பது ஒரு நிலத்தை வாங்கும்போது, வாங்கியவர் மற்றும் விற்பவர் இடையிலான பரிவர்த்தனையை அரசுப் பதிவேட்டில் பதிவு செய்வது மட்டுமே.

தாலுகா அலுவலகத்திலோ அல்லது tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்திலோ பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியும்.

tamilnilam website
tamilnilam.tn.gov.in/citizen/Screen shot

பட்டா என்றால் என்ன? அதில் எத்தனை வகைகள் உள்ளது?

உட்பிரிவு, சர்வே எண், கூட்டு பட்டா, தனிப்பட்டா பற்றி காணலாம்..

பட்டா என்பது ஒரு அசையா சொத்தின் உரிமையாளர் யார் என்பதற்கு வருவாய்த் துறை வழங்கக்கூடிய ஓர் ஆவணம். பட்டாவில் கூட்டுப் பட்டா, தனிப் பட்டா என இரண்டு வகைகள் உண்டு. என்னிடம் இருந்து நீங்கள் நிலம் வாங்கினால் அவருக்கு அளிக்கப்படும் பட்டா தனிப் பட்டா. நிலத்திற்கான சர்வே எண் உங்கள் பெயருக்கு மாற்றப்படும்.

நிலத்தை அப்படியே வாங்கினால் அது உட்பிரிவு இல்லாத (Non-Subdivision) பட்டா. எளிதாக கிடைத்துவிடும்.

நிலத்தின் ஒரு பகுதியை மட்டும் வாங்கினால் அது உட்பிரிவுடன் கூடிய (Subdivision) பட்டா. உட்பிரிவுடன் கூடிய பட்டா கிடைக்க தாமதம் ஆகலாம், அரசு ஊழியர்கள் நிலத்தை அளந்து சர்வே எண்ணில் உட்பிரிவு வகுத்து பட்டா வழங்க வேண்டும். இதற்கான கட்டணமும் அதிகமாக இருக்கும். அதுபற்றி பின்னால் பார்க்கலாம்.

சர்வே எண் என்பது, நமக்கு ஆதார் எண் இருப்பது போல நிலத்துக்கான அடையாள எண். சர்வே எண் 144 என்ற நிலத்தைப் பிரிக்கும் போது ஒருவருக்கு 144/1A என்ற உட்பிரிவைப் பிரித்து வழங்குவர். சர்வே எண்ணைப் புல எண் என்றும் குறிப்பிடுவர்.

ஒரு நிலத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட உரிமையாளர்கள் இருந்தால், அந்த நிலத்திற்குக் கூட்டுப் பட்டா வழங்கப்படும். உதாரணமாக ஒரு பிளாட்டில் பத்து பேர் இருக்கிறார்கள் என்றால், பத்து பேருடைய பெயரிலும் பட்டா இருக்கும். அதன் பெயர் கூட்டுப் பட்டா. பொதுவாக நிலம் வாங்கிய 15 நாள்களில் பட்டா வழங்கப்படும்.

பட்டா மாற்றம் செய்வது எப்படி?

ஆன்லைனில் விண்ணப்பிக்க முதலில் இணையதளத்தில் பெயர், மொபைல் நம்பர், வீட்டு முகவரி போன்ற விவரங்களைப் பதிவு செய்து ஒரு ஐடி மற்றும் பாஸ்வேர்டு பெற்றுக்கொள்ள வேண்டும். 

* tamilnilam.tn.gov.in/citizen/ உள்நுழைய வேண்டும்.

* Apply என்ற ஆப்ஷனை கிளிக் செய்து Patta Transfer-ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.

* முழு சர்வே எண் அலலது உட்பிரிவு பட்டா ஆகியவற்றில் உங்களுக்குத் தேவையானதை தேர்ந்தெடுங்கள்.

* நிலம் அமைந்துள்ள மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

* பத்திரத்தில் உள்ள சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண்ணை உள்ளிட்டால், முந்தைய உரிமையாளர் பெயர் மற்றும் நிலத்தின் பரப்பு குறித்த விவரங்கள் திரையில் தோன்றும்.

* நிலத்தின் விவரங்களை சரிபார்த்து விட்டு, பெயர், மொபைல் எண் மற்றும் முழு முகவரியை உள்ளிட வேண்டும்.

* இப்போது தேவைப்படும் ஆவணங்களை pdf வடிவில் பதிவேற்றி விட்டு, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தினால் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும்.

விண்ணப்பம் முடிந்த பிறகு உங்களுக்கான விண்ணப்ப எண் கொடுக்கப்படும்.

பட்டா மாற்றத்திற்கு தேவையான ஆவணங்கள்:

 பிழைகள் இல்லாமல் அனைத்து ஆவணங்களும் சரியாக இணைக்கப்பட்டால் மட்டுமே பட்டா மாறுதல் செயல்முறை சரியாக முடியும். இல்லாவிட்டால் பணிகள் தேங்கி பல மாதங்கள் இழுத்தடிக்கப்படலாம். எனவே பின்வரும் ஆவணங்கள் சரியாக இருக்கிறதா எனப் பார்ப்பது அவசியம்!

Aadhar card
அடையாள அட்டை canva

1. உங்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட நிலத்தின் பத்திர நகல்

2. நிலம் பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து நடப்பு தேதி வரையில் பெறப்பட்ட வில்லங்கச் சான்று

3. நிலத்தின் முந்தைய உரிமையாளரின் பெயரில் இருந்த பட்டா மற்றும் சிட்டா நகல்.

4. ஆதார் அட்டை

5. வாக்காளர் அடையாள அட்டை

6. சொத்து வரி அல்லது மின்சாரக் கட்டண ரசீது

7. வாரிசு உரிமை அடிப்படையில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்தால் கூடுதலாக இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ் தேவைப்படும்.

8. பான் கார்டு

பட்டா விண்ணப்பிக்க அரசு நிர்ணயித்த கட்டணம் எவ்வளவு?

பட்டா மாற்றத்திற்கு அதன் வகையைப் பொறுத்து விண்ணப்பக் கட்டணம் வசூலிக்கப்படும். உட்பிரிவு இல்லாத பட்டாவுக்கு 60 ரூபாயும் உட்பிரிவு உள்ள பட்டாவுக்கு கூடுதலாக உட்பிரிவு அளவீட்டுக் கட்டணமாக ரூ.400 முதல் ரூ.600 செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு எத்தனை நாட்களில் புதிய பட்டா கிடைக்கும்?

உட்பிரிவு தேவையில்லாத நிலங்களுக்கு விண்ணப்பித்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். உட்பிரிவு தேவைப்படும் நிலங்கள் (Subdivision): விண்ணப்பித்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

பட்டா விண்ணப்பத்தின் நிலையை எப்படிச் சரிபார்ப்பது?

தமிழ்நாடு அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தி நிலையைச் சரிபார்க்கலாம்.

e-service website
இ-சேவை இணையதளம்Screen Shot

பட்டா பெயர் மாற்ற விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது?

தமிழ்நாட்டில் பட்டா பெயர் மாற்ற விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணத்தை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். பின்னர் உரிய ஆவணங்களுடன் மீண்டும் விண்ணப்பிக்கலாம் அல்லது மேல்முறையீடு செய்யலாம்.

விண்ணப்பம் நிராகரிக்கப்படும்போதே அதற்கான காரணம் தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரருக்கு மேல் முறையீட்டுக்கான வாய்ப்பும் வழங்கப்படும்.

ஆன்லைனில் விண்ணப்பத்தின் நிலையைச் சரிபார்த்து, நிராகரிப்புக்கான காரணம் குறிப்பிடப்பட்டுள்ள உத்தரவைப் பெற வேண்டும். ஆவணங்கள் விடுபட்டிருந்தால், விற்பனைப் பத்திரம், முந்தைய பட்டா, வில்லங்கச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

வட்டாட்சியரின் (Tahsildar) நிராகரிப்பு உத்தரவில் அதிருப்தி இருந்தால், அந்த உத்தரவு கிடைத்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் வருவாய் கோட்டாட்சியரிடம் (RDO / Sub Collector) மேல்முறையீடு செய்யலாம். RDO-வின் உத்தரவிலும் அதிருப்தி இருந்தால், மாவட்ட வருவாய் அலுவலரிடம் (DRO) மறுஆய்வு (Revision) கோரலாம். இதற்கு பொதுவாக உத்தரவு கிடைத்த நாளிலிருந்து 90 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

நிலத்தின் உரிமை தொடர்பாக வாரிசுரிமை அல்லது குடும்ப உறுப்பினர்களிடையே சர்ச்சை இருந்தால், அந்தப் பிரச்சினையைத் தீர்க்க சிவில் நீதிமன்றத்தை அணுக வேண்டியிருக்கலாம்.

 How to Apply for Patta Name Transfer Online in Tamil Nadu: Complete Details and Step-by-Step Guide
பத்திரம் உங்கள் பெயரில் இருந்தால் மட்டும் போதுமா? பட்டா இல்லாத நிலத்தை வாங்கினால் என்னென்ன சிக்கல்கள் வரும்?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.