தவெக முன்னிலை   தவெக முன்னிலை
தமிழ்நாடு

முன்னிலையில் விஜய் நண்பர்! தூத்துக்குடியை பிடிக்கிறதா தவெக?

கோவில்பட்டி, திருநெல்வேலி, மதுரை உட்பட தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் தவெக முன்னிலை வகிக்கிறது.

Vinvizhi Leninton

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பான்மை பெற ஒரு கட்சிக்கு 118 இடங்கள் தேவை. தற்போது திமுக 52 இடங்களிலும், 72 இடங்களில் அதிமுகவும், 102 இடங்களில் தவெக முன்னிலையில் உள்ளனர். இந்த ஆண்டு தேர்தல் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது. தற்போது வரை தவெக முன்னிலையில் இருந்து வருகிறது.

தற்போது தென்மாவட்டங்களில் திமுக - தவெக இடையே கடும் போட்டி நிலவுகிறது. குறிப்பாக தூத்துக்குடி தொகுதியை பொறுத்தவரை தற்போது திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பின்னடைவை சந்தித்துள்ளார். அதிமுக சார்பில் செல்லபாண்டியன், திமுக சார்பில் கீதா ஜீவன், தவெக சார்பில் ஸ்ரீநாத் போன்றோர் 2026 சட்டமன்ற தேர்தலை சந்தித்தனர். தற்போது கீதாஜீவன் பின்னடைவை சந்தித்துள்ளார். 2021-ல், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த பி. கீதா ஜீவன் 50,310 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2016-ல் திமுக-வைச் சேர்ந்த பி. கீதா ஜீவன் வெற்றி பெற்றார். கடந்த தேர்தல்களில் கீதாஜீவன் வெற்றபெற்ற நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்துள்ளார். மேலும், கோவில்பட்டி, திருநெல்வேலி, மதுரை உட்பட தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் தவெக முன்னிலை வகிக்கிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவை பின்னுக்குத்தள்ளி தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகிக்கிறது. தற்போது, ​​தவெகவின் ஸ்ரீநாத் 11,592 வாக்குகளுடன், இதுவரை 7,030 வாக்குகள் பெற்றுள்ள திமுகவின் கீதா ஜீவனை விட 4,562 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான திமுகவின் பி. கீதா ஜீவன், தற்போது வாக்கு எண்ணிக்கையில் பின்தங்கியுள்ளார். அடுத்தடுத்த முன்னிலை விவரங்கள் போன்றவற்றை காத்திருந்துதான் பார்க்கவேண்டியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.