தலைநகரில் தவெக முன்னிலை! உதயநிதியை பின்னுக்கு தள்ளிய டி. செல்வம்.. கோட்டையை பிடிப்பாரா விஜய்?

ஏப்ரல் 25ம் தேதி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து டி.செல்வம் தற்காலிகமாக நீக்கப்படுவதாக
சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி
Published on
Updated on
1 min read

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிட்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பின்னடைவை சந்தித்து வருகிறார். அதே தொகுதியில் போட்டியிட்ட தவெக வேட்பாளர் டி செல்வம் முன்னிலையில் இருக்கிறார்.

அவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் தவெக கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 25ம் தேதி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து டி.செல்வம் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை அறிவித்தார். தவெக கட்சி நிர்வாகிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், தனிப்பட்ட சந்திப்புகளை நடத்தியதாகவும் கூறப்பட்டது. இது போன்ற காரணங்களுக்காக செல்வம் இடைநீக்கம் செய்யப்பட்டார் என்றும், அதையடுத்து ஏப்ரல் 26ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு பனையூர் அலுவலகத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் டி.செல்வம் தவெக வில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

அவர் தவெக சார்பில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார். தற்போதைய நிலவரப்படி அவர் உதயநிதி ஸ்டாலினை விட 7479 வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளார். மேலும் சென்னையின் பல்வேறு தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர். எழும்பூர் தொகுதியில் ராஜ்மோகன், ஆயிரம் விளக்கு தொகுதியில்  ஜே.சி.டி பிரபாகர்,அண்ணா நகரில் ராம்குமார், வேளச்சேரி - கிறிஸ்டி பிரித்திவி மற்றும் ராயபுரம் - கோகுல் ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர். சென்னையில் 16 தொகுதிகளிலும் தவெக முன்னிலை வகித்து வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com