Mekedatu dam issue Mekedatu dam issue
தமிழ்நாடு

உதயநிதி கொடுத்த அட்வைஸ்.. 'ஓகே' சொன்ன முதல்வர் "ஒரு மனதாக நிறைவேறியது.. மேகதாது அணைக்கட்டுவதற்கு எதிரான தனித்தீர்மானம்!"

கொள்கையில் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம். ஆனால், மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அணைத்து கட்சிகளும் மக்கள் பக்கத்தில்தான் நிற்கும்.

Vinvizhi Leninton

மேகதாது அணைக்கு எதிரான தனித் தீர்மானத்திற்கு திமுக, அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளன.

விவசாயிகளை வஞ்சிக்கும் இந்த மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 'அதை தடுக்க வேண்டும்' என்று எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இன்று கூடிய சட்டமன்றத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தீர்மானம் எடுக்கப்பட்டது. மத்திய அரசின் அனுமதி பெறாமல் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து பேசிய முதலமைச்சர் விஜய், கொள்கையில் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம். ஆனால், மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அனைத்து கட்சிகளும் மக்கள் பக்கத்தில்தான் நிற்கும். விவசாயிகளுக்காகவும், மக்களுக்காகவும் அவர்கள் பக்கம் நிற்க வேண்டியது நமது கடமை. யாரையும் குறைகூறாமல் மக்களுக்காக அனைவரும் ஓரணியில் நிற்கவேண்டும் என்றும் முதலமைச்சர் பேசினார். மேலும், இதனைத்தொடர்ந்து தீர்மானத்தை வாசித்தார். அதில், 5.2.2007 காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பையும், உச்சநீதி மன்றம் அளித்த 16.2.2018 அன்று அளித்த தீர்ப்பை மதிக்காமல், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவை பெறாமலும், ஒன்றிய அரசின் எந்தவித அனுமதியையும் பெறாமலும் கர்நாடக அரசு காவிரி அணையின் குறுக்கே தன்னிச்சையாக மேற்கொள்வதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கர்நாடக அரசின் இந்த செயலுக்கு இந்த பேரவை கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது என்று தனது தீர்மானத்தில் முதலைமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காவிரி பிரச்சனை 2 மாநிலங்களின் உணர்வுபூர்வ பிரச்சனையாக அவர் குறிப்பிட்டார். மேலும், முதலமைச்சரின் இந்த தீர்மானத்திற்கு ஒருமனதாக அனைத்து கட்சிகளும் தங்களது ஆதரவினை வழங்கினார். மேலும், இந்த தீர்மானத்தில் திருத்தும் செய்யுமாறு உதயநிதி குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்த தீர்மானத்தை ஒன்றிய அரசிற்கு கடிதம் மூலமாக அனுப்பிவைக்கபடுவதற்கு பதிலாக தமிழ்நாட்டின் அனைத்து சட்டமன்ற கட்சி உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து ஒரு குழுவாக சென்று ஒன்றிய அரசிடம் கொடுத்து நமது ஒற்றுமையை காண்பிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஆதரவு தெரிவித்ததோடு பரிந்துரையும் வழங்கினார். மேலும், முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சி தலைவரின் பரிந்துரையை கூடுதலாக இணைக்கலாம் என்றும் கூறினார். இதன் அடுத்த கட்டமாக, சட்ட ரீதியாக இந்த பிரச்சனையை எவ்வாறு அணுகுவது என்பது குறித்த முடிவுகள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

ஒருமனதாக அனைத்து கட்சியினரும் இதற்கு ஆதரவு அளித்ததற்கு முதல்வர் விஜய் நன்றியினை தெரிவித்தார். இது குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன், சுமுகமாக இரு மாநில முதல்வர்கள் பேசி முடிக்கவேண்டியதை முதல்வர் விஜய் அரசியலாக ஆக்குகிறார் என்று பேசினார். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய காங்கிரஸ் அரசு தவெக அரசிற்கு ஆதரவு தெரிவித்திருக்கும் வேளையிலும், கூடுதலாக கர்நாடக முதல்வர் தமிழ்நாட்டின் முதல்வரை சந்தித்து பேசுவதற்கு தயாராக இருக்கும் வேளையிலும் இந்த பிரச்சனையை சுமுகமாக முடிக்காமல் விஜய் கூட இதில் அரசியல் ஆதாயம் தேடுவதாக அவர் கூறினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.