

கடந்த ஆட்சியில் ஆளுநர் உரையை ஒருமுறைக் கூட முழுமையாக வசிக்காத நிலையில் முதல் முறையாக இந்த புதிய தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் ஆளுநர் அர்லேக்கர் தனது உரையை வாசித்தார்.
மக்களே நாட்டின் உண்மையான எஜமானர்கள் என்றார் பேரறிஞர் அண்ணா, என்று அண்ணாவின் மேற்கோள்களில் இருந்து ஆளுநர் தனது உரையை தொடங்கினார். அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் எஜமானர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு 17வது சட்டமன்ற முதல் கூட்டத் தொடரில் அமர்ந்திருக்கும் உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்ததே உண்மையான ஜனநாயகன் என்றால் அண்ணல் அம்பேத்கர் என்று அம்பத்கரையும் மேற்கோள் காட்டினார். அப்படிப்பட்ட ஜனநாயகம் மலரவேண்டும் என்றால் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், சட்டமேதை டாக்டர். அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலையம்மாள் ஆகியோரை கொள்கை தலைவர்களாக கொண்டுள்ள சாதி, மதம், மொழி, இனம், பணம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு செயல்பட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயால் மட்டுமே முடியும் என்று ஆட்சி அதிகாரத்தில் மக்கள் அவர்களை அமர வைத்துள்ளார்கள் என்று பேசினார்.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் விசில் புரட்சியை ஏற்படுத்தி இமாலய வெற்றியை தமிழக முதல்வர் பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார். சுதந்திர இந்தியாவிற்கு பிறகு 1967ம் ஆண்டு அறிஞர் அண்ணாவும் 1977ம் ஆண்டு எம்ஜிஆரும் தமிழகத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தினார்கள் அந்த வரிசையில் தமிழக முதல்வர் விஜய் இந்திருப்பதாக அவர் ஆளுநர் கூறினார்.
மாநில உரிமை, பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்பு, சமூக நீதி, சம வாய்ப்பு, மாற்று திறனாளிகள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள, திருநாள் மற்றும் சிறுபான்மையினர் நலன், கல்வி உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய ஆட்சி அமைக்கும் அரசாக, சட்டங்களை இயற்றும் அரசாக, திட்டங்களை தீட்டும் அரசாக, ஏழரை கோடி மக்களுக்கான அரசாக இந்த அரசு விளங்கும் என்றும் அவர் தெரிவித்தார். கடந்த 74 வருடங்களில் தமிழக அரசியல் வரலாற்றில் கண்டிராத ஆட்சிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பதை செய்துகாட்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். முதல்வர் பிரதமரை சந்தித்து தமிழ்நாட்டின் நீண்ட கால கோரிக்கைகளான மேகதாது அணைகட்ட கர்நாடக அரசினை தடுக்கவும், தமிழக மீனவர்கள் கைது செய்வதை தடுக்கவும், தமிழாண்டிற்கு தேவையான நிதியுதவினை வழங்குதல் உள்ளிட்டவற்றை பற்றி பேசியுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
ஒன்றிய அரசிற்கு மக்கள் அளிக்கும் வரிப்பணத்தை அதாவது நிதி பகிர்வினை சட்டரீதியாக பெறுவதற்காக சட்டவல்லுனர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்படும் என்றும், தமிழாண்டிற்கு நியாயமாக பெறவேண்டிய நிதியினை பெறுவது உறுதி செய்யப்படும் என்றும், மாநில நலனை காக்க போராடுவதற்கு ல், நளதீர்த்தங்களை நிறைவேற்றுவதற்கு போதுமான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் ஒன்றியரசினை வலியுறுத்தி இந்த அரசு செயல்படும் எனஎன்று ஆளுநர் பேசினார். கடந்த ஆண்டுகளில் தமிழ்நாடு மிகமோசமான நிதி நிலைமையை சந்தித்ததாகவும், கடந்த கால அரசினால் மறைக்கப்பட்ட நிதி நிலைமையை அறிவிக்கும் வகையில் வேலையறிக்கையை இந்த அரசு வெளியிட்டதாகவும் அவர் கூறினார். கடன் அளவு 2 மடங்காக உயர்ந்திருப்பதாக அவர் கூறினார். இதனால் தமிழகத்தில் உள்ள ஒரு தனி நபர் மீது 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான கடன் சுமை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளை முன்னிறுத்தியே தவெக அரசு செயல்படுவதாகவும் ஆளுநர் தனது உரையில் கூறினார். மேலும், கடந்த ஆட்சியில் வரி வருவாய், திட்ட அமலாக்கத்துறையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், லஞ்சத்தை ஒழிக்க தவெக அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். ஊழலற்ற நிர்வாகத்தை நடத்த தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டுவருவதாகவும், நிதிபற்றாக்குறை இருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் ஆளுநர் தனது உரையில் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பால் 14 லட்சம் விவசாயிகள் பலனடைந்துள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இயற்கை வளக் கொள்ளையை தடுத்து வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், போதையில்லா தமிழகத்தை உருவாக்க தமிழக அரசு செயல்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள ஆறுகளை இணைக்க முதலில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் என்றும் அவர் கூறியுள்ளார். குறிப்பாக இந்த அரசின் மூலம் டாஸ்மாக்கில் ஊழல் மூலம் திரட்டப்படும் நிதி தடுக்கப்பட்டு அரசு கஜானாவிற்கு திருப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் உதவி பேராசிரியர்கள் பணி நிரப்பப்படும் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு கிட்டத்தட்ட 39 நிமிடங்கள் ஆளுநர் உரையாற்றினார். ஆளுநர் அர்லேகரை அடுத்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதனை தமிழ் வாசித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.