+2 Result +2 Result
தமிழ்நாடு

நாளை வெளியாகிறது +2 தேர்வு முடிவுகள்! வெளியானது அதிகாரபூர்வ தகவல் - முடிவுகளை ஈஸியா எப்படி பார்க்கலாம்?

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம்.

Vinvizhi Leninton

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சமீபத்தில் புதிய அரசு அமைந்த பிறகே தேர்வு முடிவுகள் வெளியாகும் என்ற தகவல்கள் பரவிய நிலையில், தற்போது அரசு தேர்வுத்துறை இயக்ககம் திட்டமிட்டபடி முடிவுகள் வெளியாகும் என்று உறுதி செய்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2 முதல் மார்ச் 25 வரை நடைபெற்றது. அப்போது மொத்தம் 7,92,494 மாணவர்கள் தேர்வெழுதியிருந்தனர். இதில் 7,53,142 பேர் தேர்ச்சி பெற்று, ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 95.03 சதவீதமாக பதிவாகியிருந்தது.

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் அறிந்துகொள்ளலாம். தேர்வு முடிவுகளைப் பார்ப்பதற்கு முன், நுழைவுச்சீட்டை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை அறியும் முறை:

• முதலில் tnresults.nic.in அல்லது dge.tn.gov.in இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
• முகப்புப் பக்கத்தில் “TN HSC Plus Two Result 2026” என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
• பின்னர், நுழைவுச்சீட்டில் உள்ள பதிவு எண்ணை சரியாக உள்ளிட வேண்டும்.
• அடுத்து பிறந்த தேதியை dd/mm/yyyy வடிவில் பதிவிட வேண்டும்.
• அதன் பிறகு சமர்ப்பி (Submit) பொத்தானை அழுத்தினால் தேர்வு முடிவு திரையில் தோன்றும்.
• மாணவர்கள் தங்களது பாட வாரியான மதிப்பெண்கள், மொத்த மதிப்பெண்கள் மற்றும் தேர்ச்சி நிலையைப் பார்க்கலாம்.
• பின்னர் முடிவை PDF வடிவில் பதிவிறக்கம் செய்யவோ அல்லது ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்துக்கொள்ளவோலாம்.

நுழைவுச்சீட்டை இழந்த மாணவர்கள் உடனடியாக தங்களது பள்ளியைத் தொடர்புகொண்டு பதிவு எண்ணை பெற்றுக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.