"ஜல்லிக்கட்டு போராட்டம் போல் மெரீனாவில் கூடுவோம்".. சமூகவலைதள பதிவுகளால் காவல்துறை நடவடிக்கை

மெரீனா சர்வீஸ் சாலைக்குள் செல்லும் வாகனங்கள் அனைத்தும் போலீசார் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது .
Merina Beach Protest
Merina Beach Protest
Published on
Updated on
1 min read

தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காத சூழ்நிலையில் சமூக வலை தளங்களில் ஜல்லிக்கட்டு போராட்டம் போல மெரீனாவில் போராட்டம் வெடிக்கும் என்ற தகவல்கள் பரவி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்திய உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் மெரீனா கடற்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது . உழைப்பாளர் சிலை இருந்து கலங்கரை விளக்கம் வரை ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டு மெரீனா சர்வீஸ் சாலைக்குள் செல்லும் வாகனங்கள் அனைத்தும் போலீசார் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது .

2 காவல் உதவி ஆணையர்கள் தலைமையில் 8 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட சுமார் 400 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது .குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு மெரீனாவில் போராட்டம் நடத்த வருபவர்கள் எங்கிருந்து வருவார்கள் என்பதை போலீசார் கண்டறிந்து வைத்து அங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.

கண்ணகி சிலை பேருந்து நிலையம், மற்றும் கண்ணகி சிலை பின்புறம் சர்வீஸ் சாலை, விவேகானந்தர் இல்லம் எதிரே உள்ள பிளாட்பாரம், டாக்டர் பெசன்ட் சாலை சந்திப்பு, சர்வீஸ் சாலை மாற்றுத்திறனாளிகள் மரம் பாதை, ப்ளூ பிளாக் பீச் நுழைவு சர்வீஸ் சாலை, ஔவையார் சிலை பின்புறம் உள்ள சர்வீஸ் சாலை, விபி ராமன் சாலை சந்திப்பு, காந்தி சிலை பின்புறம் உள்ள சர்வீஸ் சாலை, கலங்கரை விளக்கம் நுழைவு வாயில், லூப் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கூடுதலாக குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் , பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com