CM Vijay CM Vijay
தமிழ்நாடு

"முதல்வராகிறார் விஜய்!" கிடைத்தது மேஜிக் நம்பர் 118 - நிபந்தனையற்ற ஆதரவளித்த விசிக

காங்கிரஸ் 5 இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்கள், விசிக 2 இடங்கள் மற்றும் ஏற்கனவே தவெக சார்பில் உள்ள 107 இடங்களுடன் தவெக-விற்கு ஆட்சியமைக்க தேவைப்பட்ட பெரும்பான்மை எண்ணான 118 கிடைத்துள்ளது.

Vinvizhi Leninton

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், ஆட்சியமைக்க வேண்டிய 118 பெரும்பான்மை இல்லாததால், தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்கள் நீடித்து வந்தது. இதனையடுத்து திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி தவெக-விற்கு ஆதரவளித்தது. இதனை தொடர்ந்து 2 கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக கூறிய நிலையில், விசிக இன்று தனது முடிவை வெளியிடுவதாக தெரிவித்திருந்ததது.

விசிக தமிழக வெற்றி கழகத்திற்கு தனது ஆதரவை வழங்கும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்த நிலையில், இடதுசாரிகளை போன்று வெளியில் இருந்து ஆதரவு தருவார்களா? அல்லது தவெக-வுடன் கூட்டணியா? என்பது போன்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்த வண்ணம் உள்ளது. எனவே சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் இன்று காலை முதல் செய்தியாளர்கள் காத்திருந்த நிலையில் மாலை 4 மணிக்கு அதிகாரபூர்வமாக செய்தியாளர்களை சந்தித்து கட்சியின் தலைவர் திருமாவளவன் விசிக நிலைப்பாட்டை அறிவிப்பார் என சொல்லப்பட்டிருந்தது.

தற்போது விசிக சார்பில், தவெக ஆட்சியமைக்க ஆதரவு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனிடையில் செய்தியாளர்களை சந்தித்த தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அக்கடித்ததோடு நன்றி கூறினார். மேலும் அவர், "அனைத்து தோழர்களுக்கும் நன்றி, ஜனநாயகம் காக்கப்படும். மக்களின் ஆதரவுடன் எங்களின் தலைவர் தமிழக முதலமைச்சராகிறார்" என்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறினார். தற்போது, காங்கிரஸ் 5 இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்கள், விசிக 2 இடங்கள் மற்றும் ஏற்கனவே தவெக சார்பில் உள்ள 107 இடங்களுடன் தவெக-விற்கு ஆட்சியமைக்க தேவைப்பட்ட பெரும்பான்மை எண்ணான 118 கிடைத்துள்ளது. மற்ற இடதுசாரிகள் காட்சிகளை போன்று விசிக-வும் வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து தவெக தலைவர் விஜய் எப்போது பதவி ஏற்பார்? என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் எழுந்துள்ளது. மேலும், இன்று மாலை 7 மணிக்கு ஆளுநர் அர்லேகர் கேரளா செல்லவுள்ள நிலையில் தவெக தலைவர் விஜய் மீண்டும் சந்திபாரா? என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. தற்போது தவெக தலைவர் மீண்டும் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். மற்ற அனைத்து நகர்வுகளையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.