2026 - 2027 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தற்போது சட்டமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். அப்போது மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை குறித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு மகளிரின் உரிமையைப் பாதுகாக்கவும், அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தவும் தமிழக அரசு அறிவித்த முத்தான திட்டம் மகளிர் உரிமை தொகை திட்டம் என தெரிவித்தார்.
குடும்பத்திற்காக நாள் முழுவதும் இல்லத்தில் உழைக்கும் மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் அவர்களது வங்கிக் கணக்கில் மாதம் தோறும் ரூ.1,000 செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக திகழ்கிறது. தற்போது வரை இந்த திட்டத்தில் 1.31 கோடி மகளிர் இதன் மூலம் பயன் பெறுகின்றனர். தமிழநாட்டை முன்னோடியாக கருதி பிற மாநிலங்கள் இத்திட்டத்தை பின்பற்றத் தொடங்கி உள்ளன என்பது இதன் வெற்றிக்கான சான்று.
என கூறியுள்ளார். மேலும், சமீபத்தில் கடந்த (பிப்ரவரி 13) .31 கோடி பயனாளிகளுக்கு ரூ.5,000 தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி-ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் ரூ.3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 இந்த திட்டத்தில் முன்கூட்டியே வழங்கப்பட்டது.
முதலமைச்சர் எதிர்காலத்தில் வரக்கூடிய தடைகளை கணித்து இதை செயல் படுத்தியதாகவும் , இதன் மூலம் தமிழ்நாடு "இன்ப அதிர்ச்சியில்" உறைந்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, எதிர்காலத்தில் இத்தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்பட ஆலோசனைகள் நடத்தப்படும் என தெரிவித்திருக்கிறார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.