“தாயின் கள்ளக்காதலனால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்” - வலியால் அலறி துடித்த மூன்று வயது குழந்தை… ஆத்திரமடைந்த கணவன் செய்த சம்பவம்!

எழிலரசி குழந்தையை தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக...
“தாயின் கள்ளக்காதலனால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்” - வலியால் அலறி துடித்த மூன்று வயது குழந்தை… ஆத்திரமடைந்த கணவன் செய்த சம்பவம்!
Published on
Updated on
2 min read

தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 23 வயதுடைய எழிலரசி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் மூன்று வயதில் சிவதர்ஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது. சிவசங்கர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்திருக்கிறார். எனவே தினமும் காலை வேலைக்கு செல்லும் சிவசங்கர் மீண்டும் வீட்டில் மாலை 7 மணி போல வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இந்நிலையில் எழிலரசிக்கும் பாலகோடு அடுத்த திம்மம்பட்டி பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஐயப்பன் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி சிவசங்கர் வீட்டில் இல்லாத போது இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. மனைவியின் கள்ளக்காதலை அறிந்த கணவன் எழிலரசியை கண்டித்திருக்கிறார். இதனை தொடர்ந்து எழிலரசி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தனது கள்ளக் காதலன் ஐயப்பனுடன் மூன்று வயது குழந்தையை அழைத்து கொண்டு வேட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

Admin

பின்னர் இருவரும் சேர்ந்து தர்மபுரி எஸ்வி., ரோட்டில் வாடகைக்கு வீடு எடுத்து கணவன் மனைவி போல வசித்து வருகின்றனர். இதற்கிடையில் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வரும் ஐயப்பன் குழந்தை சிவதர்ஷிகாவிற்கு உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்து கொடுமை படுத்தி இருக்கிறார். இவ்வாறு அடிக்கடி ஐயப்பன் சிறுமிக்கு சூடு வாய்த்த நிலையில் அவருக்கு உடல் நல குறைபாடு ஏற்பட்டுள்ளது. எனவே எழிலரசி குழந்தையை தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். குழந்தை ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்த குழந்தையின் தந்தை சிவசங்கர் தனது உறவினர்களுடன் மருத்துவமனைக்கு சென்றதுடன் போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் தர்மபுரி நகர் போலீசார் இருவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் எழிலரசியை சேலம் மத்திய சிறையிலும் அவரது கள்ளக்காதலன் ஐயப்பனை தர்மபுரி சிறையிலும் அடைத்தனர். தாயின் கள்ளக்காதலன் மூன்று வயது குழந்தைக்கு சூடு வைத்து கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com