நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக பொறுப்பு ஆளுநர் இராசேந்திர விசுவநாத் அர்லேகர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.
இந்நிலையில் பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாவதாக பாடப்பட உள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. அதற்கு முன்னதாக வந்தே மாதரம் பாடல் முதலாவதாக பாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இந்த நிகழ்ச்சி நிரல் அமைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பின் பொது பலவேறு அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் தங்களுது கண்டனத்தை பதிவு செய்திருந்தனர். இருந்தபோதிலும் அறிவித்த படியே முதலில் வந்தேமாதரம், இரண்டாவதாக தேசிய கீதம், இறுதியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழ் தாய் வாழ்த்து எழுதிய மனோன்மணியம் சுந்தரனார் பெயரில் நடந்த பட்டமளிப்பு விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், “நெல்லை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 3வதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதற்கு சிபிஎம் கண்டனம்” தெரிவிப்பதாக சிபிஎம் மாநில செயலாளர் பெ சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் “பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு சென்றதில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதையடுத்து “தமிழ்நாட்டில் இனி எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், எதிர்வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் புதிய சட்டத்தை அரசு இயற்ற வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார்.
சமூக நீதி துறை அமைச்சர் வன்னி அரசு அவர்களும் இதற்கான கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில் “அன்னைத் தமிழுக்கு வாழ்த்துப்பா படைத்த மனோன்மணியம் சுந்தரனார் பெயரிலான பல்கலைக்கழகத்திலேயே தமது தமிழ் வெறுப்பு கலகத்தை தொடங்கியுள்ளது மக்கள் பவன். ஆளுநரின் தமிழர் விரோதப்போக்கு ஏற்புடையதல்ல. அவரவர் தாய்மொழிக்கு முன்னுரிமை தராமல், வந்தேமாதரம் மூலம் போலி தேசபக்தியை கட்டமைக்க முனைவது அரசியலமைப்பு சட்டத்துக்கே எதிரானதாகும்” என்று மத்திய அரசுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள், “முதல் முறையாக தமிழ்நாடு பல்கலைக்கழகம் ஒன்றில், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு, வந்தே மாதரம் பாடலுடன் பட்டமளிப்பு விழா தொடங்கியுள்ளது” என்றும் “வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா என்று கேட்டவர், இப்போது இதைக் கண்டித்து எதாவது பேசுவாரா? என்று தமிழக முதல்வர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.