“திமுகவிற்கு தகுதி கிடையாது” - நீட் போராட்டம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேச்சு! தவெக-வின் நிலைப்பாடு?

தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது மட்டும் தீர்வு அல்ல...
அமைச்சர் CTR நிர்மல்குமார்
Published on
Updated on
2 min read

மதுரை திருநகரில் உள்ள திருப்பரங்குன்றம் செய்தியாளர்கள் அறையை அமைச்சர் சி டி ஆர் நிர்மல்குமார் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து தற்போதைய அரசியல் சூழல் மற்றும் மாணவர்களின் நீட் போராட்டம் குறித்தும் பேசினார்.

டெல்லியில் நடைபெறும் மாணவர்கள் போராட்டம் குறித்த பேசிய அமைச்சர் நிர்மல்குமார், “மாணவர்கள் போராட்டத்தில் நமது நிலைப்பாடு ஏற்கனவே சொன்னது போல தான். டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்தோம். அற வழியில் நடைபெற்ற போராட்டத்திற்கு காவல்துறை நடத்திய தாக்குதல் கடும் கண்டனம் தெரிவித்தோம். நீட் வேண்டாம் என்பதுதான் நமது நிலைப்பாடு, டெல்லியில் நீட் தேர்வை சீரமைக்க வேண்டும்” என்று தெரிவித்தார். மேலும் “தமிழகத்தில் அறவழியில் நடக்கும் போராட்டத்திற்கு தமிழக அரசு சார்பில் அனுமதியும் முழு பாதுகாப்பும் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். “ஒரு சிலர் நீட் தேர்வை மறுசீரமைப்பு செய்யவும், ஒரு சிலர் நீட் தேர்வை விலக்க வேண்டியும் போராடுகிறார்கள். தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது மட்டும் தீர்வு அல்ல நம்முடைய கோரிக்கை நீட் வேண்டாம். அவர் பதவி விலகினாலும் நீட் தொடரும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் “நீட் -க்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் திமுக தலைவர்கள் பங்கேற்று நிறைய பேசி உள்ளார்கள். இதை பேசும் தகுதி திமுகவுக்கு கிடையாது” என்றும் “அவர்கள் தான் இதை ஐந்து வருடத்தில் மோசமான சூழ்நிலைக்கு கொண்டு சென்றார்கள். திமுக ஆட்சிக்கு வரும்போது நீட் தேர்வை நிறுத்துவோம் என்று சொன்னார்கள். தவறான நம்பிக்கையை மக்களுக்கு கொடுத்து, இப்போது பேசுகிறார்கள்” என்றும் பேசியுள்ளார். நீட் தேர்வு வேண்டாம் என்பதில் தவெக உறுதியாக உள்ளதாகவும், “நேரமும் காலமும் வரும்போது அதற்கான முதல் குரலாக நம்மளுடைய குரல் இருக்கும்” என்றும் குறிப்பிட்டார்.

ஜனநாயகம் திரைப்படத்தை பார்த்துவிட்டு அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்ணீர் விடும் காட்சிகள் பரவுவதும் அதன் மீதான எதிர்க்கட்சிகள் விமர்சனம் குறித்த கேள்விக்கு, “எங்கள் தலைவருடைய மூன்று வருடம் பயணத்தை பார்க்கிறோம் எங்க மனதில் ஓடினது அவருடைய கடுமையான பயணம் போராட்டம்” என்றும் குறிப்பிட்டார். “எவ்வளவு பிரச்சனைகள் சந்தித்தார். அத்தனையும் தாண்டி இந்த படம் மிகப்பெரிய அளவில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை நிப்பாட்ட நினைத்த அனைத்து தீய சக்திகளுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அவர் முதல்வரான பிறகு அதைப் பார்க்கும் ஒரு வாய்ப்பு அதை பார்க்கும்போது மிகவும் வித்தியாசமாக இருந்தது. ரசிகர்கள் கட்சிக்காரர்கள் படத்தை பார்க்கும் போது முதல்வருடைய மூன்று வருட போராட்டம் அதுதான் மனதில் வந்தது அதனால் இதனை சாதாரண படமாக பார்க்கவில்லை.

மேலும் விருதுநகரில் ஜனநாயகம் திரைப்படம் திரையிடும்போது விஜயபிரபாகரன் தோல்வி குறித்து வீடியோ திரையிடப்பட்டது. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம் யாரையும் சொல்லும் நோக்கத்திற்காக செய்யவில்லை. அங்கிருக்கும் நிர்வாகிகள் யாரோ தவறாக செய்திருப்பார்கள். சட்டமன்ற உறுப்பினருக்கு இதில் பெரிய உடன்பாடு இல்லை. நிர்வாகிகள் தெரியாமல் போட்டு இருப்பார்கள், MLA-க்கும் அதுக்கும் தொடர்பில்லை" என்று தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com