vijay vs bjp  
தமிழ்நாடு

"நேரில் வரச்சொல்லுங்க." டார்கெட் விஜய்! - ஜே.பி.நட்டா தமிழகம் வருவதன் பின்னணி!?

இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது கூட திமுக-வை எதிர்த்து விஜய் பேசியதை நான் வரவேற்கிறேன் என்றுதான் அண்ணாமலை....

மாலை முரசு செய்தி குழு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களின் வெற்றியை உறுதி செய்ய பம்பரமாக சுழன்று கொண்டு இருக்கின்றன. ஆளுங்கட்சியான திமுக ஆட்சிக் கட்டிலிருந்து இறங்கத் தயாராக இல்லை. அவர்களின் கூட்டணிக்குள் சலசலப்புகள் இருந்தாலும் அது இன்னும் பொதுவெளிக்கு வரவில்லை. ஆனால், பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக -வின் சண்டை மூலைமுடுக்குகளில் எல்லாம் பேசுபொருளாகியுள்ளது.

பாஜக எப்படியாவது திமுக -வை வீழ்த்தி தமிழகத்தில் காலூன்றி விட வேண்டும் என கடுமையாக போராடி வருகிறது. அதன் முதல்படிதான் அதிமுக -உடனான கூட்டணி. அதிமுக -உடன் கூட்டணி அமைத்த நாளிலிருந்தே பஞ்சாயத்துதான். தற்போதுதான் இரு கட்சிகளும் ஏதோ ஒரு சுமூகமான மனநிலைக்கு வந்துள்ளது. இந்த சூழலில்தான் அதிமுக -வில் உள்கட்சி பூசலும் எழுந்துள்ளது.

பற்றாக்குறைக்கு பாஜக -வின் அண்ணாமலையே அந்த கட்சிக்கு ஒரு தலைவலியாக மாறியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனது மாநில தலைவர் பதவியை பறித்த நாளிலிருந்து இன்று வரை தனக்கு எந்த முக்கிய பதவிகளும் வழங்கப்படாததால் கடுப்பாகி போன அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ் ஆகியோரையெல்லாம் தூண்டிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த அமளிகளுக்கெல்லாம் இடையில் விஜய் -ன் அரசியல் பிரவேசம் அனைவருக்கும் திகிலூட்டும் ஒன்றாக அமைந்துள்ளது. விஜய் -ன் கடும் திமுக எதிர்ப்பு அனைத்து பிரதான கட்சிகளுக்கும் ஆபத்துதான். இதுவரை தேர்தலை சந்திக்காத ஒரு புதிய கட்சி 20% வாக்குகளை பெற வாய்ப்புண்டு என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த விஜய் Factor -அனைத்து பிரதான கட்சிகளுக்கும் ஒரு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.

விஜய் முதன் முதலில் கட்சி துவங்கி பேச ஆரம்பித்தபோது திமுக -வின் குடும்ப அரசியலை ஒழிப்பதுதான் தனது அரசியலின் நோக்கமே என்று பேசினார். பிறகு பாஜக -வை கடுமையாக தாக்கினார். ஆனால் அதிமுக பெருமளவில் தாக்கப்படவில்லை. அதிமுக மீது  விஜய் -க்கு ஒரு soft corner இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் கடந்த மதுரை மாநாட்டில் ‘சிங்கம் தனியாக தான் வரும்’ பேசி அதையும் முடித்துவிட்டார்.

ஆனால் விஜய் Factor எந்த பக்கம் இருக்கிறதோ அந்த பக்கம் பலம் வாய்ந்த பக்கம் ஆகும், ஏன்னெனில் அவர் திமுக, அதிமுக, நாம் தமிழர், விசிக, பாஜக என அனைவரின் ஓட்டையும் உடைப்பார். அவர் 2026 தேர்தலில் வெற்றி பெறுவாரா? இல்லையா? என்பது உறுதியாக தெரியாது. ஆனால் அவர் தொங்கு சட்டமன்றத்தை உருவாக்குவார், அது உறுதி என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

ஆனால், இதையெல்லாம் பாஜக தலைமைக்கு நன்றாக தெரியும், மேலும் விஜய் Factor -ஐ அவர்கள் நன்றாக கவனித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல்,  எந்த இடங்களிலும் பாஜக தலைவர்கள் விஜயை தரக்குறைவாக விமர்சித்திருக்க மாட்டார்கள், ஒரு soft tone -ஐதான் மெயின்டைன் செய்வார்கள். இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போதுகூட திமுக எதிர்த்து விஜய் பேசியதை நான் வரவேற்கிறேன் என்றுதான் அண்ணாமலை பேசியிருந்தார். பாஜக -வை பொறுத்தவரை அதிமுக -விற்கு தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பை பெற்று தரும் எண்ணம் எல்லாம் இல்லை. ஒட்டு மொத்த நாட்டையே ஆளும் ஒரு தேசிய கட்சியால் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை, அதுக்கு பெரும் முட்டுக்கட்டை திமுக. அந்தக்கட்சியை அகற்ற என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் பாஜக செய்யும். 

அதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைகிறது பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா -வின் திடீர் தமிழக பயணம். வருகிற அக்டோபர் 3-ஆம் தேதி தமிழகம் வரும் நட்டா, சட்டமன்ற தேர்தலின் வியூகங்கள் குறித்து பேசவுள்ளார். இதில் தமிழ்  நாட்டு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட பல மூத்த தலைவர்கள் பங்கேற்பர் என சொல்லப்படுகிறது. மேலும் 2 -ஆம் தேதியே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் வருகை தரவுள்ளார், இந்த சூழலில் நட்டா, தமிழகத்தில் பாஜக -வின் வலிமை மற்றும் கட்சியை மேலும் பலப்படுத்துவதற்கான வியூகங்களை வகுப்பார் என சொல்லப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல், அதிமுக மூத்த தலைவர்கள் சிலரும்  நாட்டவோடு பேச்சு வார்த்தை நடத்துவார் என சொல்லப்பட்ட நிலையில், கூடுதல் தகவலாக விஜய் -உடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தலாம் என சொல்லப்படுகிறது.

காரணம் எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போல இருவரின் ஒரே நோக்கமும் திமுக -வை அழிப்பது தான் என்பதாலும், விஜய் அதிமுக-பாஜக கூட்டணியுடன் இணைவதன் மூலம் நிச்சயம் திமுக -வை தோற்கடிக்க அதிக வாய்ப்பு உண்டு என்பதாலும், விஜயை நேரில் அழைத்து நட்டா பேசுவார் எதிர்பார்க்கப்படுகிறது . ஆனால் கடைசி நேரத்தில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம் தேர்தல் வரும்  வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.