தமிழ்நாடு

அகவிலைப்படி உயர்வு: முதலமைச்சருக்கு ஆசிரியர்கள் கூட்டமைப்பு நன்றி..! 

Malaimurasu Seithigal TV

16 லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஓய்வூதியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தி தமிழ்நாடு முதலைச்சருக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா.அருணன் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படிஉயர்த்தி வழங்குவதாக தமிழ்நாடு அரசு  அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. அரசு அலுவலர்கள்  மற்றும் ஆசிரியர்களுக்கு 38 % -ஆக உள்ள  அகவிலைப்படியானது ஏப்ரல் 1- ம் தேதி முதல் 4% உயர்த்தப்பட்டு 42 % -ஆக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். 

இது தொடர்பாக ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா.அருணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  16 லட்சம் தமிழ்நாடு அரசு ஊழியர் ஓய்வூதியர்களுக்கு 38% விழுக்காடாக இருந்த அகவிலைப்படியை 4% உயர்த்தி 42% விழுக்காடாக உயர்த்தி வழங்கி இருப்பதை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வரவேற்றுள்ளார். அதே வேலையில் ஏற்கனவே ஒன்றிய அரசு ஜனவரி 1ம் தேதி முன் தேதியிட்டு வழங்கியதை போன்று வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும் எனக் கூறியுள்ளார். மேலும், இனிவரும் காலங்களில் ஒன்றிய அரசு எப்போதெல்லாம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்குகிறதோ அப்போதெல்லாம் உடனுக்குடன் உயர்த்தி வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்ததை வரவேற்ற அவர் கலைஞரின் மறு உருவம் ஸ்டாலின் என புகழாரம் சூட்டியுள்ளார். 

மேலும், அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை கைவிட்டு பழைய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.