தமிழ்நாடு

சென்னை: 2ஆம் கட்டமாக மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணி...திறந்து வைத்த முதலமைச்சர்!

Tamil Selvi Selvakumar

சென்னை மாதவரத்தில் மெட்ரோ ரயில் வழித்தடத்திற்காக சுரங்கம் தோண்டும் பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.   

சுரங்கம் தோண்டும் பணியினை திறந்து வைத்தார் ஸ்டாலின்:

சென்னையில் 2ஆம் கட்டமாக 61 ஆயிரத்து 841 கோடி ரூபாய் மதிப்பில்  3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை சுரங்கம் தோண்டும் பணியை மாதவரம் பால் பண்ணை அருகே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

மாதவரம் முதல் சிப்காட் வரை அமையவுள்ள தடத்தில் 30 சுரங்க ரயில் நிலையங்கள் உட்பட 50 மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரங்க பாதை தோண்டும் பணிக்காக 23 ராட்சத இயந்திரங்கள் மாதவரத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.