அண்ணாமலை 
தமிழ்நாடு

“இனிமே TVK-வுக்கும் அண்ணாமலைக்கும் தான் போட்டியே..” - ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு கருத்து! உள்ளாட்சி தேர்தலில் களமிறங்குகிறதா புதிய கட்சி?

கட்சி சின்னம், கொடி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது..

Muthu Lakshmi

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகி கடந்த மாதம் 5ம் தேதி, புதிய இயக்கத்தை தொடங்கினர். அந்த இயக்கத்திற்கு ‘We the Leaders’ என்ற பெயரும், உறுப்பினர்கள் சேர்க்கைக்கான இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டது. தற்போது வரை 18,96,116 பேர் இந்த இயக்கத்தில் இணையதளம் மூலம் சேர்ந்துள்ளனர். இது தமிழக அரசியல் களத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களின் அரசியல் தலையீடு முக்கிய பங்கு வகித்தது. அதன் பின்னர் இயக்கம் தொடங்கிய அண்ணாமலைக்கும் இளைஞர்கள் ஆதரவு இருப்பதை இந்த சேர்க்கை எண்ணிக்கை வெளிப்படுத்தியது. 

தற்போது அந்த இயக்கத்தின் அடுத்தகட்ட அரசியல் நகர்வாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அண்ணாமலையின் ‘We the Leaders’ இயக்கம் சார்பில் சோழவந்தான் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் முக்கிய தீர்மானங்கள் குறித்து முடிவெடுக்கபட்டு, அரசியல் நகர்வு குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. முக்கிய தீர்மானமாக சோழவந்தான் தொகுதி சார்பில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக பொது மக்கள் தொண்டர்கள் இணைந்து மாபெரும் பேரணி நடத்துவது என்றும் பேரணியை அண்ணாமலை கலந்து கொண்டு தொடங்கி வைக்க உள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிர்வாகிகள் பேசியதாவது, We The Leaders சார்பில் தொண்டர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. தொகுதி சார்பில் போதைப்பொருளுக்கு எதிராக மாபெரும் பேரணி நடத்த உள்ளதாகவும், அதில் அண்ணாமலை கலந்து கொண்டு தொடங்கி வைக்க உள்ளதாகவும், இயக்கம் விரைவில் 1 கோடி உறுப்பினர்களை சேர்த்து மாபெரும் இயக்கமாக மாறும்” என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். “விரைவில் இந்த இயக்கம் கட்சியாக தமிழகத்தில் உருவெடுக்கும், கட்சி சின்னம், கொடி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது” என்றும் அண்ணாமலையின் புதிய கட்சி குறித்த முக்கிய குறிப்புகளை பகிர்ந்து கொண்டனர். 

தொடர்ந்து பேசிய அவர்கள், “தமிழகத்தில் அண்ணாமலை கட்சி ஆரம்பித்த உடன் தமிழக அரசியல் சூடு பிடிக்கும்” என்றும் “தவெக-வுக்கும் அண்ணாமலைக்கும் தான் தமிழகத்தில் போட்டியே இருக்கும், மற்ற கட்சிகள் சிதறி சின்னாபின்னமாகி விடும்” என்றும் தெரிவித்தார். “தவெக அரசு 6 மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தினால் நாங்கள் போட்டியிடுவது குறித்து யோசிப்போம். உள்ளாட்சி தேர்தல் தள்ளிப் போனால் கண்டிப்பாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு பல இடங்களில் வெற்றி பெற்று பல்வேறு பதவிகள், பெறுவோம்” என்றும் குறிப்பிட்டிருந்தனர். 

மேலும், தவெகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி தமிழக மக்கள் அண்ணாமலைக்கு முழு ஆதரவு தருவார்கள் என்றும் அரசியல் பரபரப்பு கருத்தை தெரிவித்தார். மேலும் மற்ற கட்சிகள் காணாமல் போய்விட்டது என்றும் குறிப்பிட்டார். அண்ணாமலையின் அரசியல் வருகை தாமதமாகிறதா? பாஜகவில் இருந்து விலகி புதிய  கட்சி தொடங்கி வெற்றி பெற முடியுமா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “தாமதமாக வந்தாலும் ரொம்ப வலிமையாக களமிறங்கியுள்ளோம். எங்களுக்கு சினிமா பலமோ, அரசியல் பலமோ எதுவும் இல்லை, மக்கள் சேவை மட்டுமே இலக்கு என்றும் குறிப்பிட்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்