2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிவிக்கபட்டதையடுத்து தேர்தலில் களமிறங்கும் கட்சிகள் கூட்டணி குறித்த முடிவுகளை எடுப்பதில் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, 4ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு 5 தொகுதிகள் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது. அதையடுத்து நேற்று நேற்று நடந்த விசிக தெக்கத்தி பங்கிட்டு இன்னும் இழுபறியாகவே உள்ளது என தகவல். இதையடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார் வேல்முருகன்.
“நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சிக்கு கூடுதல் இடங்கள் கேட்டு திமுகவின் பேச்சுவார்த்தை குழுவிடம் கோரிக்கையை முன்வைத்திருந்தோம். ஆனால், இப்போது வரை கூடுதல் இடங்கள் பற்றி தகவல் கிடைக்கப்பெறவில்லை. இதனால் திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கட்சியினர் தெரிவித்துள்ளனர்" எனத் த.வா.க வேல்முருகன் தெரிவித்திருந்தார்.
இதனால் திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறுகிறதா? என்ற கேள்வி எழுந்தது. திமுக கூட்டணியில் தவாக-வுக்குக் கடந்த முறை ஒதுக்கப்பட்ட இடங்களை விட, இம்முறை கூடுதல் தொகுதிகளை வேல்முருகன் எதிர்ப்பதாகவும் , 2 முதல் 10 தொகுதிகள் வரை கேட்டதாகவும் திமுக 1 அல்லது 2 சீட் மட்டுமே தரம் முடிவில் இருப்பதாகவும் தகவல்கள் வந்தது. திமுக கூட்டணியில் கட்சிகள் அதிகமாக இருப்பதால் சீட் ஒதுக்க முடியாத நிலையில் சிறிய கட்சிகளுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்ற கருத்துகளும் களத்தில் பரவுகிறது. மேலும் காங்கிரஸிற்கு அதிக தொகுதிகள் கொடுக்க வேண்டிய நிலையில் இதை திமுக தவிர்ப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக அதிருப்தி அடைந்தார் வேல்முருகன். மேலும் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் அல்லது அதிமுக-வுடன் கூட்டணி அமைப்பர் என எதிர்பார்க்கப்பட்டது .
இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள தவாக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டி ஆலோசித்தார். இந்த கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து போட்டியிடுவது என முடிவு எடுக்கப்பட்டது. இதனால் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனித்து போட்டியிட முடிவு எடுத்துள்ளது.
வேல்முருகன் குறிப்பாக, வட தமிழகத்தில் தனது செல்வாக்கை நிரூபிக்க குறைந்தபட்சம் 5 முதல் 7 தொகுதிகள் வரை அவர் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், திமுக தலைமை இதற்கு உடன்படாததே இந்த விரிசலுக்கு முதல் காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த கோரிக்கைகளை முன் வைத்தும் கூடுதல் சீட்டு கேட்டும் திமுகவிலிருந்து தவாக விலகியுள்ளது.
பாமக அன்புமணிக்கு போட்டியாக தன்னை வன்னிய சமுதாய மக்களுக்கான பிரதிநிதியாக நிலைநிறுத்த வேல்முருகன் பல முயற்சிகள் கொண்டுவருகிறார். அதே போல் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் வாக்கு வங்கியை தனக்கு சாதகமாக வைத்திருக்கும் தவாக கட்சியின் தனித்துப் போட்டியிடும் முடிவு திமுக கூட்டணியை பாதிக்குமா அல்லது வாக்குகளை பிரிக்குமா என்பது குறித்து தற்போது அரசியல் களத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.