தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள்,, செவிலியர்கள் பாற்றாக்குறை...! பலியான கர்ப்பிணி பெண்..! .

Malaimurasu Seithigal TV

கோவை மாவட்டம் வால்பாறையில் செவ்வாய்கிழமை கற்பிணி பெண் இறந்ததை அடுத்து மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் சந்திரா விசாரணை செய்த நிலையில் இன்று வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி வால்பாறை அரசு மருத்துவமனையில் காலை 9 மணி அளவில் ஆய்வு பார்வையிட்டார். 

இந்த ஆய்வில் கர்ப்பிணிப் பெண்  இறந்ததற்கு காரணம் என்னவென்று மருத்துவர்களிடம் விசாரணை செய்தார்.  
அப்போது, மருத்துவர்கள் செவிலியர்கள் ஆப்ரேஷன் தியேட்டர் ஊழியர்கள் இல்லாததால், பற்றாக்குறை ஏற்பட்டதாலும்  மயக்க மருந்து மருத்துவர் போன்றவர்கள் இல்லாததால் நோயாளிகளை பொள்ளாச்சி பகுதிக்கு அனுப்ப நேரடிகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இந்நிலையில் சில தினங்களாக வால்பாறை சுற்றுவட்டார  பகுதிகளில் வனவிலங்கு நடமாட்டம் இருப்பதாலும், பகுதியில் இரண்டு நபர்களை வடநாட்டு வட மாநில தொழிலாளர்களே சிறுத்தை தாக்கி படுகாயம் ஏற்படுத்தி உள்ள நிலையிலும் நேற்று அதேபோல் இஞ்சிப்பாறை பகுதியில் கரடி ஒரு தொழிலாளியை கரடி தாக்கியதை ஆய்வு செய்தார். 

இதனையடுத்து, அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவதற்கு தேவையான வசதிகளை செய்து தருவதற்கு அரசிடம் கோரிக்கை வைப்பதாக  சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தெரிவித்தார். மேலும் இறந்த கர்ப்பிணி பெண் வீட்டிற்கு சென்று நேரில் ஆறுதல் தெரிவித்தார். 

அப்போது,  நகரச் செயலாளர் மயில் கணேசன் நகர துணை செயலாளர் பொன் கணேசன், ஐடி விங் நகர செயலாளர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகவேல், சசி, சுடர், எஸ்.கே.எஸ் பாலு மற்றும் ஆர்.ஆர். பெருமாள் மற்றும் பல கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.