“கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் பிரபு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்ட ஆபாச குறுஞ்செய்தி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன” என தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம். மேலும் இந்த விவகாரத்தில் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி ஏழு நாட்களுக்குள் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை கொடுக்க வலியுறுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு “ஆபாச குறுஞ்செய்தி” அனுப்பியதாக எழுந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணை நடத்துவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு சி. அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான வாட்ஸ்அப் செய்திகளை அனுப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, 2026 நவம்பர் 11 அன்று 'தி நியூஸ் மினிட்' பத்திரிகையில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. மேலும், அந்த அறிக்கை, சட்டமன்ற உறுப்பினரின் முந்தைய முறைகேடான நடத்தை மற்றும் அவர் போதையில் ஆட்சியரின் இல்லத்திற்குச் சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் குறிப்பிடுகிறது.
மேலும் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் திருமதி விஜயா ரஹத்கர், தமிழக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், மாவட்ட ஆட்சியர் மூத்த அதிகாரிகளிடம் அளித்ததாகக் கூறப்படும் முறையீடுகள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகியவற்றை விசாரிப்பது உட்பட, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தக் கோரியுள்ளார். புகார் தொடர்புடைய டிஜிட்டல் ஆதாரங்களை பாதுகாத்து ஆய்வு செய்யுமாறு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட நபர் வகிக்கும் பதவியைப் பொருட்படுத்தாமல், எந்தவொரு அரசியல் அல்லது வெளிப்புற தலையீடுமின்றி இந்த விவகாரம் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
7 நாட்களுக்குள் விரிவான நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கை (ATR) ஒன்றை ஆணையம் கோரியுள்ளது. பெண் அரசு அதிகாரிகளின் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் நலன் ஆகியவை விதிவிலக்கின்றி பேணப்பட வேண்டும். எந்தவொரு பதவியோ அல்லது செல்வாக்கோ, கூறப்படும் துன்புறுத்தல் அல்லது முறைகேடுகளுக்கான பொறுப்பிலிருந்து யாரையும் விடுவிக்க முடியாது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.