பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை நியாய விலை கடையில் வைக்க அனுமதி மறுப்பதாக நாகர்கோவிலில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி கூட்டுறவு பண்டகசாலை உட்பட்ட வேப்பமூடு நியாய விலை கடையில் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் மோடியின் புகைப்படத்தை வைக்க அனுமதியின்றி வந்தவர்களால் பரபரப்பு. பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் வந்தவர்களை போலீசார் தடுத்ததால் நியாய விலை கடை முன்பு போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பிய பாஜவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மோடியின் புகைப்படத்தை வைக்க அனுமதி இல்லையா என கேள்வி எழுப்பியும், தமிழக முதல்வர் படத்தை அரசு அதிகாரிகள் கொண்டு வந்து வைக்காமல், தவெக கட்சியினர் வைத்ததாகவும் குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் இன்று பாஜகவை சேர்ந்த நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் பாரத பிரதமரின் புகைப்படத்தை வைக்க சென்றனர், அப்போது தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து பிரதமர் புகைப்படம் வைக்க அனுமதி மறுத்தனர். அதையடுத்து பாஜகவினர் பிரதமர் மோடி புகைப்படத்தை நியாய விலை கடையில் வைப்பதற்கு அனுமதி உள்ளதாகவும் அரசாணை இருப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால் தமிழகத்திற்கு அந்த அரசாணை செயல்படுத்தப்பட தகவல் இல்லை என கூறி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பபட்டதுடன், மேலும் அனுமதி பெற்ற வைத்துக்கொள்ளுங்கள் என வரிகளை அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல், “அனுமதி வேண்டும், அனுமதி வேண்டும், பிரதமர் மோடி புகைப்படம் வைக்க வேண்டும்” என்ற கோசங்கங்களுடன் ரேஷன் கடைக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாஜகவினர், “பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை நியாய விலைக்கடையில் வைக்க மறுப்பது ஏன், மத்திய அரசு தமிழகத்தில் இலவச ரேஷன் அரிசிக்கு மூன்றில் இரண்டு பங்கு கொடுத்து வருவதாகவும், அப்படி இருந்தும் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க மறுக்கிறார்கள்” என கண்டனம் தெரிவித்தனர். மேலும் “தமிழக முதல்வர் புகைப்படத்தை அரசு அதிகாரிகள் வைக்காமல் தவெக கட்சியினர் கொண்டுவந்து வைத்ததாகவும், இதனால் பல்வேறு இடங்களில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது எனவும் குற்றம்சாட்டினர். பிரதமர் புகைப்படத்தை வைக்க அனுமதி வழங்க வேண்டும் மேலும் அனுமதி மறுத்ததற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் பாஜக கவுன்சிலர் ரோசிட்டா தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.