“அந்த கத்திய எடு.. அவன கார்ல ஏத்து” - கூலி தொழிலாளி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய தவெக நிர்வாகி! அமைச்சருடன் தொடர்பா?

மேலும் ஆபாச வார்த்தைகள் கூறி கொலை வெறி தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது
tvk member attack crane driver
Published on
Updated on
2 min read

தாம்பரத்தில் கூலி தொழிலாளி ஒருவரை தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி ஆபாச வார்த்தைகளால் திட்டியும், கடுமையாக தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்துள்ள வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தவெக கொடி பொறுத்திய வெள்ளை நிற காரில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத் குமார் அவர்களின் புகைப்படம் ஒட்டப்பட்ட காரில் வந்து தவெக-வினர், கூலி தொழிலாளி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது.

தாம்பரம் பீர்க்கங்கரணை அருகே கட்டிட தொழிலாளியை தவெக நிர்வாகி  கடுமையாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பீர்க்கன்காரணை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புத்தர் நகர் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று உடைக்கப்பட்டு அதன் செங்கல்கள் ஜல்லி உள்ளிட்டவைகளை லாரிகளில் ஏற்றி விற்பனை செய்வது நடந்து வந்தது. அப்போது அந்த பகுதிக்கு வந்த தமிழக வெற்றி கழகத்தின் செங்கல்பட்டு வட மேற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜெய் என்கிற ஜெய் கிருஷ்ணன் கட்டிடம் உடைத்துக் கொண்டிருந்த கிரேன் இயந்திரத்தை இயக்கும் கூலி தொழிலாளர்களிடம் தனக்கு “ஒரு லாரி முழுவதும் இலவசமாக செங்கல் சல்லி உடைக்கப்பட்ட ரப்பீஸ் வேண்டும்” என்றும் “என் ஊரில் கட்டிடம் உடைத்தால் நிச்சயம் எனக்கு இலவசமாக செங்கல் மற்றும் ஜல்லிகளை தர வேண்டும்” என்று கூறியும் மிரட்டியுள்ளார்.

அப்போது கிரேன் இயந்திர ஓட்டுநர், “இதைப் பற்றி எனக்கு தெரியாதுன் சார், கட்டிட உரிமையாளர் வருவார் அவரிடம் பேசிக்கோங்க” என்று கூறியுள்ளார். அதற்கு உடனடியாக கோபம் அடைந்த ஜெய் கிருஷ்ணன் தனது தவெக கட்சியின் ஆட்களை வரவழைத்து கிரேன் ஓட்டுநர் மற்றும் கட்டிடத்தின் உரிமையாளரையும் சரமாரியாக தாக்கி உள்ளார். அப்போது அவர், “என் ஊருல இருந்துட்டு எனக்கே நீ லோடு தர மாட்டியா” என்றும் மிரட்டியுள்ளார். மேலும், “அந்த கத்திய எடுடா” என்றும் “அவனை காரில் ஏற்றுடா” எனவும், மேலும் ஆபாச வார்த்தைகள் கூறி கொலை வெறி தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. அந்த வீடியோ காட்சிகள் காண்போரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.  

தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு வந்து 20 நாட்கள் முடிந்த நிலையில் தமிழகம் முழுவதும் கொலை கொள்ளை பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து  அரங்கேறி வருகிறது. அதே போல் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அவ்வப்போது மக்களை மிரட்டுவதும் தாக்குவதும் தொடர்கதை ஆகியிருக்கிறது. நேற்று முன் தினம் தான் கும்பகோணத்தில் தவெக நிர்வாகிகள் இருவர், சாலையில் பேனர் வைத்ததை கண்டித்த காவலரின் காய் உடைத்து அராஜகம் செய்துத்துள்ளனர். இன்று கட்டிடத் தொழிலாளியை தமிழக வெற்றிக்காக நிர்வாகி அடிக்கும் வீடியோ காட்சிகள் என அடுத்தடுத்த குற்ற செயல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை வைத்துள்ளனர். ஆளும் கட்சியினர் இந்த மாதிரி குற்ற செயல்களில் ஈடுபடுவது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com