நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்யின் தவெக தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் என்று தாங்கள் கணித்தபோது, மக்கள் தங்களைப் பார்த்து 'சிரித்தார்கள்' என ஆக்சிஸ் மை இந்தியா அமைப்பின் பிரதீப் குப்தா தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில், 234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டமன்ற தேர்தலின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பல நிறுவனங்கள் வெளியிட்டன. அதில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், அறிமுகக் கட்சியான தவெக-விற்கு சுமார் 98 முதல் 120 இடங்கள் கிடைக்கும் என்று கணித்து, அதன் வெற்றியை முன்னறிவித்த ஒரே கருத்துக் கணிப்பு நிறுவனம் ஆக்சிஸ் மை இந்தியா மட்டுமே. ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளின் வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு, 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெறும் என்று அந்நிறுவனம் அறிவித்திருந்தது. இதற்காக பலரும் அந்நிறுவனத்தை கேலி செய்தனர். ஆனால் இறுதியில் என்னவோ, அவர்கள் கூறியதே நிஜம் என்று ஆனது.
"இது தரவு அறிவியலின் வெற்றி," என குப்தா என்டிடிவியிடம் தெரிவித்துள்ளார். "ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனமான நாங்கள் எல்லா நேரங்களிலும் எல்லாத் தொகுதிகளுக்கும் செல்வதால், மற்ற கருத்துக் கணிப்பு நிறுவனங்களால் ஏன் கள நிலவரத்தைக் கணிக்கவோ அல்லது உள்வாங்கவோ முடியவில்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்," என்று அவர் என்டிடிவியிடம் கூறியிருக்கிறார்.
92 முதல் 100 இடங்களையும், 35 சதவீத வாக்குப் பங்கையும் பெறும் எனத் தான் கணித்திருந்த ஆளும் திமுக கூட்டணியை 'குறைத்து மதிப்பிட்டுவிட்டீர்களா?' என்று கேட்டதற்கு, தற்போதைய நிலவரப்படி அவர்களின் வாக்குப் பங்கு 32 சதவீதம் என்று குப்தா பதிலளித்தார். தவெக கட்சிக்கு 35 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று அவர்கள் கணித்திருந்ததாகவும், தற்போதைய நிலையிலும் அந்த வாக்கு சதவீதம் பொருந்துவதாகவும் அவர்கள் கூறியிருக்கின்றனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் திமுக இரண்டாம் இடத்தையும், எடப்பாடி பழனிசாமியின் அதிமுக மூன்றாம் இடத்தையும் பிடிக்கும் என்பது தனக்கு 'ஓரளவுக்கு உறுதியாகத் தெரியும் என்றும் அவர் என்டிடிவியிடம் பகிர்ந்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள சமீபத்திய நிலவரங்களின்படி, அது உறுதிப்படுத்தப்படுகிறது. இளம் தலைமுறை விஜய்க்குப் பின்னால் அணி திரண்டுள்ளதே இதற்கு காரணம் என்று பிரதீப் குப்தா கூறியுள்ளார்.
தமிழக வாக்காளர்களில் 42 சதவீதம் பேர் 18 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்களிடையே இதனால் தவெக அதிக வாக்குகளைப் பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், 40 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் அவர் சுமார் 25 முதல் 30 சதவீதம் வரை அவர் பெற வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. திமுகவிற்கு அடுத்தபடியாக தவெகதான் அதிக எண்ணிக்கையிலான பெண் வாக்குகளைப் பெறும் என்று தாங்கள் மதிப்பிட்டிருந்ததாக அவர் கூறினார். அதனடிப்படையில் தற்போது தமிழக வெற்றிக் கழகம் 109 இடங்களின் முன்னிலையில் உள்ளது. தற்போது ஆட்சியமைக்க 118 தேவைப்படும் நிலையில் அதற்கான ஆலோசனையில் விஜய் இருப்பதாக கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.