எம்ஜிஆர்-க்கு பிறகு.. பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தவெக தலைவர் விஜய்! திமுக ஆட்சியை தவறவிட்டது எங்கே?

பெரிய பொருளாதாரமாக மாநிலமாக நிலை நிறுத்தியத்தற்கும், “திராவிட மாடல்” என்ற கருத்து வலு சேர்த்தது
TVK vijay
Published on
Updated on
2 min read

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதியிலும் போட்டியிட்ட விஜய் காலை தொடக்கம் முதலே முன்னிலை  வகித்து வந்த நிலையில் தற்போது வெற்றி பெற்றுள்ளார். விஜயை எம்.ஜி.ஆர் உடன் ஒப்பிடுவதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். ஆனால் அதற்கு அதிமுகவினர், கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். தற்போது அது தவிர்க்க முடியாதவையாக உள்ளது. ஏனெனில், சினிமாவில் புகழ் பெற்ற விஜய், அரசியல் அனுபவம் ஏதுமற்ற அவர், தற்போது தமிழ்நாட்டின் தேர்தல் கணிப்புகளை மொத்தமாக மாற்றி அமைத்துவிட்டார். பெரும்பாலான தேர்தல் கணிப்புகளில் வெறும் வாக்கு பிரிக்கும் வேலையில் மட்டுமே விஜய் களமிறங்கியதாக விமர்சனம் எழுந்ததது.  ஆனால் நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தற்போது ஆட்சி அமைக்கும் நிலைக்கு உருவெடுத்துள்ளது. 

நடிகர் டு அரசியல்வாதி: எம்.ஜி.ஆர் 1991-ல் அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தபோது அதை நிரூபித்தார்; ஜெயலலிதா 1991-ல் எம்.ஜி.ஆரின் வாரிசாகப் பொறுப்பேற்று முதலமைச்சரான போது அதை நிரூபித்தார். ரஜினிகாந்தின் அரசியல் லட்சியங்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை பார்த்தால், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு கட்சி உருவாகாமல் போனதுடன், திரைப்படங்களில் கவனம் செலுத்துவதற்காக ரஜினி தனது அரசியல் வருகை இல்லை என அறிவித்தார். உலகநாயகன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் எனும் கட்சியை உருவாக்கினார். ஆனால், இறுதியில், தமிழக அரசியலின் இந்த "மூன்றாவது சக்தி" 2021 சட்டமன்றத் தேர்தலிலும் 2019 மக்களவைத் தேர்தலிலும் ஒரு இடத்தைக் கூட வெல்லத் தவறியது.

திமுக எங்கே தவறவிட்டது? ஆட்சிக்கு எதிரான மனநிலை  தவிர்க்க முடியாததாக இருந்தாலும், மு. கருணாநிதியின் மறைவுக்கு பிறகு மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக கட்சி, கடந்த இரண்டு முறை மாநிலத்தை தன் வசம் வைத்திருந்தது. குறிப்பாக, பெண்களுக்கான முதன்மை திட்டமான மாதாந்திர மகளிர் உரிமை  தொகை, மகளிர் விடியல் பயணம், போன்ற சமூக நலத்திட்டங்களில் குறிப்பிடத்தக்க திட்டங்களில் சிறப்பாக செயல்பட்டது. தமிழ்நாட்டின் வலுவான, இரட்டை இலக்க வளர்ச்சியும், இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாநிலமாக நிலை நிறுத்தியத்தற்கும், “திராவிட மாடல்” என்ற கருத்து வலு சேர்த்தது. ஆனால், குறிப்பாக ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கு விஷயங்களில் தவிர விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு போன்ற பிரச்சனைகளில் திமுக விரைந்து  செயல்படாதது பெரும்  பிரச்சினையாக குறிப்பிடப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில், இந்தி திணிப்பு மற்றும் தொகுதி மறுவரையறை போன்ற பிரச்சினைகள் ஸ்டாலின் தலைமையிலான அரசு, மத்தியஅரசுக்கு எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்தது. புதிய கல்விக் கொள்கை மற்றும் நீட் தேர்வு, கல்விக் கொள்கையின் சிக்கலான பிரச்சினைகள் கூட, தமிழ் நலன்களை பாதுகாப்பதில் சிறப்பாக செயல்பட்டனர். ஆனாலும் தமிழக மக்களின் எந்த எதிர்பார்ப்பில் தவறியது திமுக என்பது கணிக்க முடியவில்லை.

தற்போது மக்களின் வரவேற்பை பெற்று வேகமாக முன்னேறி வரும் விஜய்யின் தமிழக வெற்றி கழகம், மாற்று அரசியலை கொடுக்குமா அல்லது அது வெறும் சொல்லாடலா? என்பது வரும் ஆட்சி தான் தெரியும். 1967-க்கு பிறகு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வரலாற்று வெற்றி  மீண்டும் உருவாகும் வாய்ப்பு குறித்து அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்படுகிறது. இந்த ஆண்டில், எந்த ஒரு கட்சியும் தெளிவான பெரும்பான்மையைப் பெறாததால், ‘சிங்கிள் லார்ஜஸ்ட் பார்ட்டி’ என்ற நிலை உருவானது. முக்கிய கட்சிகளின் வாக்கு பங்கீடு, மற்றும் புதிய வாக்காளர்களின் எதிர்பார்ப்பு ஆகியவை இந்த முடிவை தீர்மானிக்க முக்கிய காரணிகளாக இருக்கும். இதனால், தமிழக அரசியல் களத்தில் யாரும் கணிப்பிலும் வராத விஜயின் தவெக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com