தமிழ்நாடு

வளரக்கூடாது என்று நினைகிறார்கள்! போராடியே தொகுதிகளை பெறும் நிலை இருப்பதாக திருமாவளவன் வேதனை.. என்ன முடிவெடுக்கும் திமுக?

"நாம் வளர வேண்டும் என்று வாழ்த்தவோ அல்லது ஊக்கப்படுத்தவோ யாருமில்லை என்பதே நிதர்சனம்" எனவும் விசிக தொண்டர்களுக்கு திருமாவளவன்..

மாலை முரசு செய்தி குழு

2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்த நிலையில் திமுக கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடுக்கான முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் இந்த கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார். மேலும் கம்யூனிஸ்ட் கட்சியும் கூடுதல் தொகுதிகள் கேட்டு கோரிக்கை விடுத்திருந்தது.

அதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இரட்டை இலக்க தொகுதிகள் கேட்டு கோரிக்கை வைத்திருந்த நிலையில் உடன்படாத திமுக தலைமையால் தோஜக்குதி பங்கீட்டிங்ல இழுபறியாக உள்ளது. இந்நிலையில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் "கட்சி தொடங்கி 25 ஆண்டுகள் ஆனாலும் இன்னும் போராடியே தொகுதிகளை பெறும் நிலை இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளர். 10-க்கும் கீழ் தொகுதிகளை பெறுகிறபோது நீண்ட காலமாக காத்திருப்போர் பட்டியலை கணக்கில் கொள்ள வேண்டி இருப்பதாகவும் முகநூல் நேரலையில் விளக்கமளித்துள்ளார்.

"விசிக, 25 ஆண்டுகளை கடந்து வந்தாலும் கூட இந்த களம் இன்னும் நமக்கு புதிதாகத்தான் இருக்கிறது. அதற்கு நம்மை தகவமைத்துக் கொள்ளவில்லை, சமூகச் சூழலும் நமக்கு ஏதுவாக அமையவில்லை" என தெரிவித்துள்ளர் திருமாவளவன்,

"நாம் வலிமை பெறக்கூடாது என கருதுகிறவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால், அரசியல் களத்தில் 25 ஆண்டுகள் தாக்குப்பிடித்து, தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக களமாடுகிறோம்" எனவும் "நாம் வளர வேண்டும் என்று வாழ்த்தவோ அல்லது ஊக்கப்படுத்தவோ யாருமில்லை என்பதே நிதர்சனம்" எனவும் விசிக தொண்டர்களுக்கு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மேலும் "போராடியே தொகுதிகளைப் பெற வேண்டும், போராடியே நிதியை திரட்ட வேண்டும், நெருக்கடியில் போராடியே வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் எனும் பனி சுமைகள் எனக்கு ஏராளமா உள்ளது. இதை புரிந்து தொண்டர்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"திமுக கூட்டணியில் 9 புதிய கட்சிகளின் வருகையால், தொகுதியை குறைத்துக் கொடுப்பதற்கான அழுத்தம் அவர்களுக்கு உருவாகி இருக்கிறது" என்று கூறிய விசிக தலைவர் திருமாவளவன், "தனிப்பட்ட முறையில் திமுக கடந்த தேர்தலில் 173 தொகுதியில் போட்டியிடும் நிலையில், இந்த முறை குறைத்து போட்டியிடுவதற்கு முன் வந்திருப்பதாகவும். அதேபோல் விசிகவும் விட்டுக்கொடுக்க வேண்டும் என எங்களிடம் பேசியுள்ளார்கள்” என்றும் "விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களுக்கான நலனை மட்டும் கருத்தில் கொண்டு பேசவில்லை. கூட்டணி நலனை கருத்தில் கொண்டுதான் பேசுகிறோம். எனவே கூடுதலான தொகுதியை திமுக இன்னும் எங்களுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை." என்றும் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் இரட்டை இலக்க தொகுதி கோரிக்கையில் உறுதியாக இருப்பதாவும் தெரிவித்தார்.

புதிதாக இணைந்த தேமுதிக கட்சி இரட்டை இலக்க தொகுதி கோரிக்கைக்கு விடுத்திருந்தது. ஆனால் திமுக 6 முதல் 8 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க விரும்புகிறது என தெரிகிறது. திமுகவில் புதித்தக் இணைந்த ஒ.பன்னிர்செல்வம் மற்றும் அவருடைய மகனுக்கும் சீட் கொடுப்பதாக தெரிகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியின் கூடுதல் தொகுதிகள் கோரிக்கை ஏற்ற திமுக 2021 ல் திமுக கூட்டணியில் தேர்தலை சந்தித்து தனி சின்னத்தில் போட்டியிட்டு 6 கு 4 தொகுதிகளை கைப்பற்றிய விசிக-விற்கு ஏன் இந்த அலட்சிய போக்கு என்று அரசியல் தலைவர்களும் விசிக தொடர்களும் கேள்வி எழுப்பிவருகிறார்கள். இந்நிலையில் திமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்றுடன் முடிவடைகிறது, இதில் எத்தனை தொகுதிகள்  திமுகவிற்கு என்று முடிவு தெரியவரும் அதனை தொடர்ந்து கூட்டணி தொகுதி பங்கீடு பற்றிய விவரங்கள் தெரிவிக்கபடும் என தெரிகிறது. இன்று தொகுதி பங்கீடு பற்றி திமுகவுடன் ஆலோசனை என்று தெரிவித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்