நனவானது பிரேமலதாவின் பல நாள் கனவு.. "கேட்டதை" மறுக்காமல் கொடுத்த திமுக! இன்று காலையிலேயே விஜயகாந்த் வீட்டில் கொண்டாட்டம்!

அதிமுகவிற்கு அடுத்தடுத்து பின்னடைவு எனும் அதிருப்தி சூழலே நிலவி வருகிறது..
நனவானது பிரேமலதாவின் பல நாள் கனவு.. "கேட்டதை" மறுக்காமல் கொடுத்த திமுக! இன்று காலையிலேயே விஜயகாந்த் வீட்டில் கொண்டாட்டம்!
Published on
Updated on
1 min read

தேமுதிக - திமுக கூட்டணி பிப்ரவரி 19 அன்று உறுதியான நிலையில், முதல் முறையாக மாநிலங்களவை செல்லும் வாய்ப்பையும் பெற்றுள்ளது. தேமுதிகவின் 20 ஆண்டு கால அரசியல் பயணத்தில் முதல் முறையாக நாடாளுமன்ற மேலவைக்கு செல்லும் வாய்ப்பை பெற்று இருக்கிறது.

அதனையடுத்து மாநிலங்களவை வேட்பாளராக தேமுதிக பொருளாலரும் பிரேமலதாவின் சகோதரருமான எல் கே சுதீஷ் தேர்வு. இதுவரை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வந்த தேமுதிக , முதல் முறையாக திமுக உடனான கூட்டணியை உறுதி செய்துள்ளது. சட்டமன்ற தொகுதி பங்கீட்டில் தேமுதிக சார்பில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் இடங்கள் கோரப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேசமயம், திமுக 6 முதல் 8 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்க விரும்புகிறது என தெரிகிறது.

திமுக கூட்டணியில்  புதிதாக இணைத்திருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தொகுதி பக்கீட்டால் ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் சீட் எண்ணிக்கை குறையும் நிலையும் உள்ளது. அதனால் தேமுதிகவின் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது. திமுகவின் 2026 சட்டமன்ற தொகுதிகளில் குறைந்தது 170 தொகுதிகளில் போட்டியிடும் என தெரிகிறது.

தொடர்ந்து அதிமுக-வுக்கு பின்னடைவு ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது, சசிகலாவின் புதிய கட்சி தொடக்கம் மற்றும் தேமுதிக-வின் இந்த கூட்டணி மாற்றம் என தொடர்ந்து அதிமுகவுக்கு அடுத்தடுத்து பின்னடைவு எனும் அதிருப்தி சூழல் நிலவி வருகிறது. இம்முறையும் அதிமுக, பாஜகவிடம் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த முறை ராஜ்யசபா சீட் கோரிக்கைகை அதிமுக ஏற்கவில்லை.

2026 சட்டமன்ற தேர்தல் ஏற்கனவே சூடு பிடிக்க தொடங்கியதையடுத்து இந்த கூட்டணி வியூகம் திமுகவுக்கு சாதகமாக அமையும் என தெரிகிறது. முதலில் இருந்தே பல முனை போட்டியில் இருக்கும் என தேர்ந்த இந்த சட்டமன்றத் தேர்தலில், தவெக- காங்கிரஸ் கூட்டணி அமையும் என அரசியல் வட்டார பேச்சுக்கள் இருந்த நிலையில் அதுவும் உறுதியாகவில்லை. மேலும் வலு பெற்று இருக்கும் திமுக உடனான இந்த கூட்டணி பிரேமலதாவின் பல நாள் கனவை நிறைவேற்றும் என தெரிகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com