vijay vs jothimani 
தமிழ்நாடு

“இவங்களுக்கு திமுகவ கழட்டிவிட்டு விஜய் கூட போயிடனும்..” கூடுதல் சீட்டுக்காக நாடகம் நடத்துகிறதா காங்கிரஸ்!? - விட்டு விளாசிய பத்திரிகையாளர் மணி..!

தமிழகத்தின் பிரதான கட்சிகளான, திமுக அதிமுக -வின் கூட்டணிகளுக்குள் உள்கட்சி....

மாலை முரசு செய்தி குழு

வருகிற 2026 தேர்தலுக்குள் தமிழகத்தின் நிலையே தலைகீழாக மாறிவிடும் என்பதில் சிறு மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழ்நாட்டில் மும்முனை கூட்டணியா நான்கு முனை கூட்டணியா என்பது இன்னும் முடிவாகவில்லை. ஜனவரிக்கு பிறகுதான் கட்சிகளின் கூட்டணி குறித்து ஒரு தெளிவான நிலைப்பாடு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை தனித்துவமாகியதில் விஜய் -க்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்த 2026 தேர்தல் திமுக வேண்டுமா? வேண்டாமா? என்பது மட்டும்தான். தேர்வுக்கு முந்தைய கருத்து கணிப்புகள், திமுக -விற்கு சாதகமாகவே அமைந்தாலும், விஜய் 20% வாக்குகளை நிச்சயம் உடைப்பார் என்கின்றனர். அரசியல் விமர்சகர்கள். 

ஆனால் தமிழகத்தின் பிரதான கட்சிகளான, திமுக அதிமுக -வின் கூட்டணிகளுக்குள் உள்கட்சி பூசல்கள் நிச்சயம் உள்ளன. மேலும், அதிமுக -வின் உள்கட்சி விவகாரம் ஊரறிந்த ஒன்றாக ஆகிவிட்டது. திமுக கூட்டணி வலிமையான ஒன்றாக தென்பட்டாலும், அது உண்மையில் அப்படி இல்லை. அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி அதிக சீட்டுகளுக்கான நெருக்கடியை கொடுக்க துவங்கிவிட்டனர். மேலும், பீகார் தோல்வி அவர்களுக்கு நிச்சயம் ஒரு பதற்றத்தை கொடுத்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

காங்கிரஸ் படுதோல்வி!

50 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட கட்சியான காங்கிரஸ் பீகார் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாதவகையில் காங்கிரஸ் அம்மாநிலத்தில் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. வெறும் 5 இடங்களை மட்டுமே காங்கிரஸ் தனது கையில் வைத்திருக்கிறது. இது கட்சி ரீதியாகவே மிகப்பெரும் பின்னடைவாகும். 

காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி ஆகியோர் இணைந்து ‘மஹா கட்பந்’ கூட்டணி உருவானது. ஆனால் இந்த கூட்டணி இந்த 2025 தேர்தலில் மிகப்பெரும் வெற்றியை பெரும் என கூறப்பட்டது. ஆனால் கள நிலவரம் அனைத்தையும் மாற்றி எழுதியுள்ளது.

ஆனால் ‘மஹா கட்பந்தன்’ கூட்டணியின் தோல்விக்கு, கூட்டணியில் நிலவிய சில சிக்கல்களும் காரணம் என சில அரசியல் விமர்சகர் பெருமாள் மணி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதில், இந்த தேர்தல் பாஜக ஒரு கட்சியை எப்படி அணுகுகிறது என்பதற்கான ஒரு உதாரணம் . SIR - மீது மிகப்பெரும் விமர்சனங்கள் இருந்தாலும், அதுவே முழு காரணம் என்று சொல்லிவிட முடியாது. லோக் ஜன் சக்தி கட்சியின் ஷிராக் பஸ்வானை உள்ளே கொண்டு வந்தது மிக முக்கியமான ஒரு நகர்வு 101 - 101 என தொகுதிகளை பங்கு பிரித்துக்கொள்கின்றனர். இவையெல்லாம் வேட்புமனு தாக்கலுக்கு முன்பே நடந்துவிடுகிறது.  

ஆனால் நீங்கள் அப்படியே ‘மஹா கட்பந்தன்’ -பக்கம் வந்தால் பெயரே சிக்கல். நாடு முழுக்க INDIA கூட்டணி என இருக்கும்போது, பீகாரில் மட்டும் ஏன் ‘மஹா கட்பந்தன்’ என இருக்கிறது என தெரியவில்லை, மேலும் பீகாரிலிருந்து பிரிந்து சென்ற ஜார்கண்டில் இந்தியா கூட்டணிதான் ஆட்சியில் உள்ளது, இந்த JMM INDIA கூட்டணிக்கு கடிதம் எழுதுகிறார்கள், “எங்களுக்கு ஒரு 5 சீட்டுகளை தாருங்கள், எல்லைப்புற மாவட்டங்களில் எங்களுக்கு செல்வாக்கு இருக்கு” என கேட்டனர். அந்த கடிதத்திற்கு பதிலே இல்லை. MIM -கட்சியின் ஒவைசி 6 சீட்டுதான் கேட்டார். அதற்கும் எந்த பதிலும் இல்லை. மேலும் இந்த விவகாரத்தில் தேஜஸ்வி இணக்கமாக தான் இருந்தார். ஆனால் பெரியண்ணன் மனப்பான்மையோடு காங்கிரஸ் இந்த தேர்தலை கையாண்டுள்ளது. 36 வயதில் முதல்வர் வேட்பாளர் என ஒருவர் வருகிறர், உங்கள் கட்சிக்கு 30 ஆண்டுகளாக விசுவாசமாக இருந்த குடும்பம், அவர்களை ஆதரிக்கவேண்டியது காங்கிரசின் கடமை. ஆனால் காங்கிரஸ் அதை பொருட்படுத்தவில்லை. ‘வாக்கு திருட்டு’ பிரச்சாரத்துக்கு ராகுல் காந்திக்கு ஆதரவாக தேஜஸ்வி யாதவ் வந்தார், ஆனால் தேஜஸ்வி  முன்னெடுத்த பிரச்சாரத்துக்கு ராகுல் வரவில்லை. அவர்கள் கூட்டணியாகவே புலப்படவில்லை” என பலரும் விமர்சித்து வந்தனர். 

இந்த பீகார் தேர்தலில் காங்கிரசின் தோல்வி நிச்சயம் திமுக கூட்டணியில் எதிரொலிக்கும். இன்னும் சொல்லப்போனால் பீகாரில் அவர்கள் அடைந்த தோல்விக்காக தமிழகத்தில் மிகக்கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். அதுவும் அதிமுக -வினரால் அல்ல திமுகவினரால் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் தமிழகத்தில் காங்கிரஸ் திமுக -வில் கரைந்துவிட்டது என்பதுதான் உண்மை. ஆனால் காங்கிரசின் இளம் எம்.பி -கள் இந்த போக்கை விரும்பவில்லை. இந்த அரசியல் சிக்கல் குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த மூத்த பத்திரிகையாளர் மணியிடம் “விஜய் ஒன்றும் எங்கள் கட்சிக்கு புதியவர் அல்ல என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பேசியிருக்கிறாரே… என கேள்வி எழுப்பப்பட்டது, “சரி இவ்வளவு பேசும் இவர்கள் அவருடன் கூட்டணி அமைப்பார்களா..? 2010 -ல் விஜய் காங்கிரசில் சேர வந்தார், அவர் ஒன்றும் எங்களுக்கு புதியவர் அல்ல என பேச வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது. திமுக -வை கழட்டிவிட்டு விஜய் உடன் சென்றுவிட வேண்டும் என ஆசை உங்களுக்கு. தனியாக நின்றால் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாது. விஜய் factor -ஐ காரணம் காட்டி, கூடுதல் சீட் கேட்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் தலைமை அதை ஒருபோதும் அனுமதிக்காது. கூடுதல் சீட்டுக்காக, காங்கிரசின் மக்களவை உறுப்பினர்கள் நடத்தும் நாடகம் தான் இவை எல்லாம்.” என அவர் பேசியிருந்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.