Thirumavalavan Thirumavalavan
தமிழ்நாடு

"ஏன் தவெக-வும் திமுக-வும் ஒரே கூட்டணியில் இருக்கக்கூடாது" - திருமாவின் பேச்சால் சலசலக்கும் அரசியல் வட்டாரம்! புதிய 'ட்விஸ்ட்டா?'

திருமாவளவன் என்கின்ற தலைமைத்துவத்தை தமிழகத்தில் சிதைக்க வேண்டும் என காழ்புணர்ச்சியோடு சிலர் பேசுகிறார்கள்.

Vinvizhi Leninton

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 17 அன்று நடைபெறவுள்ள தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு தொடர்பான காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அருள்நாதன் தலைமையில் மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் பங்கேற்றார். இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டத்தை சேர்ந்த முகாம், நகர, மாவட்ட, மாநிலப் பொறுப்பாளர்கள், அணிப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும் கட்சியின் நிர்வாகிகள் இடையே பேசிய திருமாவளவன், "சனாதனத்தை பேசும் திருமாவளவன் கோவிலுக்கு கும்பாபிஷேகத்திற்கு எடுத்து செல்கிறார் என கேட்கிறார்கள் அவர்களுக்கு அது தெரியாது, திருமாவளவன் என்கின்ற தலைமைத்துவத்தை தமிழகத்தில் சிதைக்க வேண்டும் என காழ்புணர்ச்சியோடு சிலர் பேசுகிறார்கள். தேர்தலில் ஜெயித்தவர்கள் தோற்றவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து சந்தித்துக் கொண்டதை பற்றி ஏன் யாரும் விவாதம் நடத்தவில்லை, ஆனால் திருமாவளவன் திமுகவுடன் சென்றால் மட்டும் பேசுகிறார்கள். திமுக தோற்றுவிட்டதே என்பது ஒரு கவலை அதைவிட அதிமுக கண் முன்னரே சிதைத்து விடுகிறார்கள் என்பது ஒரு கவலை, அதைவிட திராவிட கட்சிகளை ஒதுக்கி விட வேண்டும் என பெரியார் காலத்திலிருந்து ஒரு முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது" என்று பேசினார்.

மேலும், பேசிய அவர், "தனிப்பட்ட முறையில் பிஜேபி மீது எந்த வெறுப்பும் கிடையாது, ஆனால் கருத்தியல் என்பது வேறு. சான்று படி என்று எனக்கு பிறந்தநாள் ஆகையால் காலை மதிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ரயில்வே அமைச்சர் அஷ்வின் வைபவ் இருவரும் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அதிமுக காலத்தில் இருந்து ஒரு கட்சியில் இருந்து மறு கட்சி பேசுவது வழக்கம் கொள்வது என்பது கிடையாது, அந்த மரபை உடைத்தவன் தான் திருமாவளவன்" என்று பேசினார்.

மேலும், "திமுகவுக்கும், தவெகவுக்கும் ஒரே எதிர் பாஜக தான், கேரளாவில் காங்கிரசும் இடதுசாரியும், மேற்கு வங்கத்தில் மம்தாவும் காங்கிரஸும் கருத்து வேறுபாடு இருந்தால் கூட இந்தியா கூட்டணி என்று வரும்போது ஒன்றாக நிற்கிறார்கள். ஏன் தமிழ்நாட்டில் அப்படி ஒரு அரசியல் இருக்கக் கூடாது?" என கட்சி நிர்வாகிகளிடையே பேசினார் திருமாவளவன். கூட்டணி குறித்த திருமாவின் அரசியல் பேச்சு மீண்டும் அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளாக தற்போது மாறியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.