தமிழ்நாடு

'இது ஒரு விசில் புரட்சி'! - பெரம்பூரில் அனல் பறக்க பேசிய விஜய்.. இது நாடா? அல்லது காடா? என்று ஆவேசம்!

எப்படி 'ஸ்மார்டாக' நம்மை ஏமாற்றினார்களோ அதேபோல் நாமும் 'ஸ்மார்டாக' அவர்களை தூக்கியெறிய வேண்டும்..

மாலை முரசு செய்தி குழு

2026 சட்டமன்ற தேர்தல் துவங்க இருக்கிற நிலையில் தவெக தலைவர் விஜய் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை பெரம்பூரில் துவங்கினர். அதில் அவர்,

"ஒரு நல்ல காரியம் துவங்குவதற்கு முன்பு, நமக்கு பிடித்தவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து தொடங்கு என்று நமது மனதிற்கு தோன்றும் தானே?, அந்த வகையில் தமிழ்நாடே நமக்கு பிடித்த இடம்தான். தமிழ்நாட்டில் எங்கு இருந்து வேண்டுமானாலும் தொடங்கலாம் ஆனால் நம்ம வீட்டு வாசலில் இருந்து தொடங்குவது என்று இருக்கிறது அல்லவா?. நம்மை பெற்ற அம்மா இருக்கும் இடத்தில் அவர்களின் ஆசியோடு இருந்து, தொடங்குவது என்று இருக்கிறது அல்லவா?. அதுதானே ஒரு நல்ல துவக்கமாக இருக்கும். ஒரு ஒளியோடு ஒரு வெளிச்சத்தோடு இதை மனதில் வைத்துதான் உங்கள் விஜய் உங்கள் பெரம்பூர் தொகுதியில் இருந்து..நம்ம பெரம்பூர் தொகுதியில் இருந்து நமது பிரச்சாரத்தை துவங்கி இருக்கிறேன்" விஜய் கூறினார்.

வடசென்னையின் அடையாளமாக இருக்கிற, நமது பெரம்பூர் தொகுதியில், லூர்து அன்னை தேவாலயம், பிரசன்ன லட்சுமி நரசிம்மர் கோவில் இருக்கிற, பல புகழ்பெற்ற மசூதிகள் இருக்கின்ற இந்த பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரத்தை துவங்கியிருக்கின்றோம். உன்னோட மக்கள் இருக்கின்ற, உன்னை நேசிக்கின்ற மக்கள் இருக்கின்ற, உழைக்கும் மக்கள் இருக்கின்ற, உழைப்பின் வாசனை இருக்கின்ற மக்களிடம் இருந்து பிரச்சாரத்தை துவங்கு என்று எனது மனசாட்சி கூறியது என்று விஜய் கூறினார்.

இதனையடுத்து, பெண்கள் பாதுகாப்பு இல்லாத, சட்டம் ஒழுங்கு சரி இல்லாத, போதை பொருள் அதிகமாக இருக்கின்ற நமது தமிழ்நாட்டை நாம் காப்பாற்றியே ஆகவேண்டும். தமிழ்நாட்டை இந்த நிலைமைக்கு கொண்டுவந்தது யார்? என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. இதற்கு 'தீயசக்தி' திமுகதான் காரணம். இப்படி ஒரு ஆட்சியை நடத்திவிட்டு விரைவில் விடைபெற போகும் ஸ்டாலின் சார்தான் காரணம். இந்த 5 ஆண்டில் ஆட்சி நடத்தினார்களா? அல்லது வெறும் ஏதும் நடந்ததா?. சோறு தண்ணீர் இல்லாமல் கூட இருந்துவிடலாம், ஆனால் அடிப்படை வசதிகள் இல்லாமல் எப்படி வாழ்வது?. நமது பெண் குழந்தைகள் இரவில் கழிவறை கூட செல்ல முடிவதில்லை. அவர்களுக்கு என்ன ஆகிவிடும் என்று அச்சத்திலேயே இருக்கவேண்டியுள்ளது. பாட்டி வயது இருப்பவர்களுக்கு கூட பாதுகாப்பில்லை, டீ கடையில் கூட நிம்மதியாக டீ அருந்த முடியவில்லை. போதையில் வெட்டி விட்டு சென்று விடுகிறார்கள் இது நாடா? அல்லது காடா? என்று ஆவேசமாகப் பேசினார்.

இங்கு அரசு என்று ஒன்று இருக்கிறதா இல்லையா? 5 வருடம் காவல்துறையை கையில் வைத்திருந்த ஸ்டாலின் சார், அடிப்படை பாதுகாப்பை கூட வழங்க முடியவில்லை என்றால் ஏன் இந்த ஆட்சி? ஏன் இந்த அதிகாரம்?. அதனால் என்னுடைய அம்மா, அக்கா, தங்கைகளே, இளைஞர்களே, தம்பிகளே உங்களை பார்த்து நான் கேட்கிறேன், இந்த தீயசக்தி திமுக ஆட்சியில் பாதுகாப்பு இருக்கிறதா? இந்த ஆட்சியில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? இந்த தீயசக்தி திமுக ஆட்சியில் நீங்கள் பாதுகாப்பாக இருந்தீர்களா? என்று மக்களை நோக்கி தனது கேள்விகளை எழுப்பினார். ஸ்டாலின் சாருக்கு மக்கள் முக்கியம் இல்லை மக்களின் அடிப்படை தேவை, பாதுகாப்பு இது எதை பற்றியும் அக்கறை கிடையாது. அவருக்கும் திமுகவிற்கு முக்கியம் என்பது குடும்பத்தோடு கொள்ளையடிப்பது மட்டுமே குறிக்கோள். நான் முன்பே கூறியதுபோல் டாஸ்மாக்கில் மட்டுமே 1000 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது. இது வெளியில் தெரிந்த ஒன்று வெளியில் தெரியாமல் இன்னும் எவ்வளவு இருக்கிறதோ?. அதேபோல் நகராட்சி தொகுதியிலும் 1000 கோடிக்கு மேல் ஊழல். நமது பிள்ளைகள் படித்து விட்டு வேலைக்காக எப்படியெல்லாம் அலைந்து கொண்டியிருக்கிறார்கள். ஆனால் இந்த அரசு, நகராட்சி துறையில் வேலைவாங்கி தருவதாக கூறி லஞ்சம் வாங்கிவிட்டு தகுதியானவர்களுக்கு வேலை இல்லாமல் செய்திருக்கிறார்கள். அதனால் தம்பி, தங்கைகளே உங்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தராத இந்த அரசை தூக்கி எறிவோம் என்று மக்களை நோக்கி பேசினார்.

அடுத்து அவர்களிடம் உள்ள அதிகப்படியான பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல், மக்களிடம் கொண்டுவந்து தருவார்கள். அதை வாங்கிக்கொண்டு அவர்களின் காதுகளில் விசிலினை ஊதி அனுப்புங்கள் என்று தவெக தலைவர் கூறினார். அவர்கள் எப்படி 'ஸ்மார்டாக' நம்மை ஏமாற்றினார்களோ அதேபோல் நாமும் 'ஸ்மார்டாக' அவர்களை தூக்கியெறிய வேண்டும். தேர்தல் நாளன்று விசிலுக்கு நேராக இருக்கின்ற அந்த 'பட்டனை' அழுத்துங்கள். கட்டாயம் இந்த தேர்தலில் வாக்களியுங்கள், 'இது ஒரு தலைமுறைக்கான தேர்தல்' எனது வசதிகளை உதறித்தள்ளிவிட்டு உங்களுக்காக வந்திருக்கிறேன். ஒருநாளும் உங்களை நான் ஏமாற்றமாட்டேன். இங்கு 4 முனை போட்டி 40 முனை போட்டி என்று கூறினாலும் இங்கு 2 முனை போட்டிதான். ஒன்று TVK மற்றொன்று DMK என்று மக்களை பார்த்து ஆவேசமாக பேசினார் விஜய். அதனால் மக்களை நேசிக்கும் விஜய்கு, விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்கள். 'இது ஒரு விசில் புரட்சி'. வெவ்வேறு வேட்பாளர்களை நிறுத்தினாலும், நானும் அவர்களும் வேறுவேறு இல்லை. நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என்று தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை பெரம்பலூரில் பேசி முடித்தார் தவெக தலைவர் விஜய்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.