tvk cader 
தமிழ்நாடு

விஜய்யின் காரை மறித்த தூத்துக்குடி பெண் நிர்வாகி! “கட்சி துவங்குவதற்கு முன்னாலிருந்தே உழைக்கிறேன்…ஆனாலும்” -பனையூரில் பரபரப்பு!

தூத்துக்குடியை சேர்ந்த அஜிதா என்ற பெண் தவெக -வில் இணைந்து...

மாலை முரசு செய்தி குழு

2026  தேர்தலை தனித்துவமாக்கியதில் விஜய் -க்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்த 2026 தேர்தல் திமுக வேண்டுமா? வேண்டாமா? என்பது மட்டும்தான். தேர்வுக்கு முந்தைய கருத்து கணிப்புகள், திமுக -விற்கு சாதகமாகவே அமைந்தாலும், விஜய் 20% வாக்குகளை நிச்சயம் உடைப்பார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

கரூர் சம்பத்திற்கு பிறகு, செங்கோட்டையன் வரவு, கட்சி மாநாடுகள் என இப்போதுதான் தான் தமிழக வெற்றி கழகம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. 

இந்நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த அஜிதா  என்ற பெண் தவெக -வில் இணைந்து பணிபுரிந்துள்ளார். இவர் விஜய் மக்கள் இயக்கமாக இருக்கும்போதே தூத்துக்குடியில் பணியாற்றியதாக கூறப்படுகிறது. தற்போது தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி காலியாக இருப்பதால் அந்த பதவிக்கு நியமிக்க வேண்டும் என கேட்டு அவரும் அவரது ஆதரவாளர்களும் தவெக அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் விடுபட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமிக்க தலைமை அலுவலகத்திற்கு விஜய் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த காரை அஜிதாவும் அவரது ஆதரவாளர்களும் இடைமறித்து நிறுத்தினர். 

அப்போது அஜிதா கையில் ஒரு மனுவை வைத்துக் கொண்டு "சார் சார்" என அழைத்தும் அவரது பிரச்சினை என்ன எனக் கூட விஜய் கேட்கவில்லை. மாறாக காரை லேசாக நகர்த்தியதால் சிலர் மீது இடித்து கீழே விழுந்தனர்.

உடனே அங்கு வந்த பவுன்சர்கள் அஜிதாவையும் அவரது ஆதரவாளர்களையும் அப்புறப்படுத்தினர்.

 பின்னர் விஜய்யின் கார் புறப்பட்டு கட்சி அலுவலகத்திற்குள் சென்றது. அங்கு போய் விஜய்யை சந்திக்கலாம் என கேட்ட போதும் அஜிதாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

சென்னை பனையூர் தவெக அலுவலகத்திற்கு  கையில் மனுவுடன் வந்த பெண் நிர்வாகி கண்ணீர் மல்க கேட்டும் விஜய் அவரிடம் என்ன பிரச்சினை என கேட்காதது வேதனையை ஏற்படுத்தியதாக அஜிதா தரப்பு தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்