tn govt 
தமிழ்நாடு

6 -ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்..! தொடர் போராட்டங்களுக்கு முடிவு எட்டப்படுமா!?

2026-ம் ஆண்டு புத்தாண்டில் முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி 20ம் தேதி நடக்க....

மாலை முரசு செய்தி குழு

தமிழக அமைச்சரவை கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில் நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 2026-ம் ஆண்டு புத்தாண்டில் முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி 20-ந்தேதி நடக்க இருக்கிறது.இந்நிலையில் வரும் ஜனவரி 6-ந்தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 2026-ம் ஆண்டு புத்தாண்டில் முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி 20ம் தேதி நடக்க இருக்கிறது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஆளுநர் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. அதேபோல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் கோரிக்கை தொடர்பாகவும் ஆலோசிக்கப்படவுள்ளது. மிக முக்கியமாக, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய்ந்திட அமைக்கப்பட்ட குழு இறுதி அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படவும் உள்ளது. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.