தபால் வாக்கு  தபால் வாக்கு
தமிழ்நாடு

தொடங்கியது தபால் வாக்கு எண்ணிக்கை! - முன்னிலையில் இந்த கட்சியா?

தற்போது வரை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் இந்த தபால் வாக்கு எண்ணிக்கையை தொடர்ந்து அடுத்தபடியாக மின்னணு வாக்கு பதிவுகள் எண்ணப்படவுள்ளன.

Vinvizhi Leninton

தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று (மே 4) வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதில் முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணத் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெற்றது. இந்த முறை பலரும் ஆர்வமாக தங்களது வாக்குகளை பதிவுசெய்ய முன்வந்தனர். அதிகாலை முதலே பலரும் தங்களது வாக்கு சாவடிகளில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதனையடுத்து, தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. இந்த தேர்தலில், அதிமுக-வுடனான பாஜக கூட்டணி, திமுக-வுடனான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, தனித்து களம் கண்ட நாம் தமிழர் கட்சி மற்றும் நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் போன்ற கட்சிகள் தனித்து தேர்தலை சந்தித்தனர். மேலும், 2026 தேர்தலில் கிட்டத்தட்ட 5.73 கோடி பேர் மொத்த வாக்காளர்களாக இருந்தனர். 2.80 கோடி ஆண் வாக்காளர்களும், 2.93 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர். இந்த முறை ஆண்களை விடவும் பெண்களின் வாக்கு எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. மேலும், இந்த தேர்தல் 4 முனை தேர்தல் என்று கூறியபோதிலும், பலராலும் இது 2 முனை தேர்தல் போட்டியாகவே பார்க்கப்பட்டது.

மேலும், இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் சமூகவலைத்தளம் முக்கிய பங்காற்றியது. இளைஞர்கள் பலரும் மாற்றத்தை எதிர்நோக்கி உள்ளதாக கூறி தவெக-விற்கு தங்களது வாக்குகளை அளிப்பதாகக்கூறினர். அது மட்டுமின்றி இந்த தேர்தலில் முதல் முறை வாக்காளர்களின் என்ணிக்கையும் அதிகரித்தே காணப்பட்டது. 14.59 லட்சம் பேர் முதல் முறை வாக்களிப்பவர்களாக இந்த தேர்தலை சந்தித்தனர். மிகப்பெரிய அளவில் பலராலும் 'இந்த தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள்?' என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இன்று காலை 8 மணியளவில் தபால் வாக்குகள் எண்ணத்தொடங்கப்பட்டுள்ளது. இந்த தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை வகிப்பதாக கூறப்படுகிறது. மேலும், தவெக தற்போது வரை தபால் வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவில் இருப்பதாக கூறப்படுகிறது. சில இடங்களில் தவெக முன்னிலை வகித்தாலும் பெருவாரியான இடங்களில் பின்னடைவையே சந்தித்துள்ளனர். திமுகவிற்கு அடுத்த நிலையில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உள்ளது.

தற்போது வரை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும் இந்த தபால் வாக்கு எண்ணிக்கையை தொடர்ந்து அடுத்தபடியாக மின்னணு வாக்கு பதிவுகள் எண்ணப்படவுள்ளன. இந்த முறை ஆட்சியை கைப்பற்றி அரியணையில் யார் அமரபோகிறார்கள்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.