"திமுகவால இதுவரை ஜெயிக்கவே முடியாத அந்த 5 இடங்கள்!" வரலாற்றை மாற்றுவாரா மு.க.ஸ்டாலின்?

திமுக தனது நீண்ட கால அரசியல் வரலாற்றில் ஒருமுறை கூட வெற்றி பெறாத சில தொகுதிகள் தமிழகத்தில் இன்றும் உள்ளன என்பது பலருக்கு ஆச்சரியமான விஷயமாக இருக்கலாம்.
வரலாற்றை மாற்றுவாரா மு.க.ஸ்டாலின்?
வரலாற்றை மாற்றுவாரா மு.க.ஸ்டாலின்?வரலாற்றை மாற்றுவாரா மு.க.ஸ்டாலின்?
Published on
Updated on
2 min read

தமிழக அரசியல் களம் தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி உச்சகட்ட பரபரப்பில் இருக்கின்றது. இன்று கிளைமேக்ஸ். குறிப்பாக, திமுக தனது நீண்ட கால அரசியல் வரலாற்றில் ஒருமுறை கூட வெற்றி பெறாத சில தொகுதிகள் தமிழகத்தில் இன்றும் உள்ளன என்பது பலருக்கு ஆச்சரியமான விஷயமாக இருக்கலாம். இந்த மோசமான வரலாற்றை இந்தத் தேர்தலிலாவது திமுக மாற்றி அமைக்குமா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழகத்தின் தேர்தல் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், திமுக பலமுறை ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருந்தாலும் மேலூர், கோவில்பட்டி, பெருந்துறை, கிள்ளியூர் மற்றும் விளவங்கோடு ஆகிய 5 தொகுதிகளில் மட்டும் இதுவரை ஒருமுறை கூட வெற்றி கனியைச் சுவைக்கவே இல்லை. பல தசாப்தங்களாக இந்தப் பகுதிகளில் திமுக தனது வேட்பாளர்களை நிறுத்தினாலும் அல்லது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கினாலும், வெற்றி என்பது அந்தப் பக்கமே தலைகாட்டாமல் இருந்து வந்துள்ளது. இந்தத் தொகுதிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு அரசியல் பின்னணிகளைக் கொண்டவை என்றாலும், திமுகவிற்கு மட்டும் இத்தனை ஆண்டுகளாக ஒரு சவாலாகவே இருந்து வருகின்றன.

இந்தச் சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. தங்களுக்கு வெற்றி வாய்ப்பே இல்லாத கோவில்பட்டி மற்றும் பெருந்துறை ஆகிய இரண்டு தொகுதிகளில் இந்த முறை நேரடியாகக் களம் இறங்க அக்கட்சித் தலைமை முடிவு செய்தது. பொதுவாகக் கூட்டணி கட்சிகளுக்குக் கொடுத்து வரும் இந்தத் தொகுதிகளை, இந்த முறை சொந்தச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியைப் பறிக்க வேண்டும் என்ற முனைப்பில் திமுக களம் காண்கிறது. இதன் மூலம் பல ஆண்டுகாலமாகத் தொடரும் தோல்வி வரலாற்றைத் துடைத்து எறிய வேண்டும் என்பதுதான் அவர்களின் முக்கியத் திட்டமாக இருக்கின்றது.

கோவில்பட்டி தொகுதியைப் பொறுத்தவரை அது நீண்ட காலமாகவே மாற்றுக் கட்சிகளின் பலமான இடமாக இருந்து வந்துள்ளது. அதேபோல் பெருந்துறையிலும் திமுக இதுவரை ஒரு வெற்றியைக்கூடப் பதிவு செய்யவில்லை. இந்தப் பகுதிகளில் நிலவும் ஜாதிய பின்னணிகள் அல்லது அந்தந்தப் பகுதிகளின் பிராந்திய பிரச்சனைகள் திமுகவின் வெற்றிக்கு முட்டுக்கட்டையாக இருந்திருக்கலாம் என்று அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர். இருப்பினும், இந்த முறை ஆட்சியில் இருக்கும் செல்வாக்கை வைத்தும், அரசின் நலத்திட்டங்களை முன்னிறுத்தியும் எப்படியாவது இந்தத் தொகுதிகளில் கொடியை ஏற்றிவிட வேண்டும் என்று திமுக தொண்டர்கள் தீவிரமாக உழைத்து வருகின்றனர்.

கிள்ளியூர் மற்றும் விளவங்கோடு போன்ற தொகுதிகளும் திமுகவிற்குப் பெரும் தலைவலியாகவே இருந்து வருகின்றன. குமரி மாவட்டத்தின் இந்தத் தொகுதிகளில் பெரும்பாலும் கூட்டணி கட்சிகளே முன்னிலை பெற்று வருகின்றன. இப்படித் தமிழகத்தின் ஐந்து முனைகளில் திமுகவிற்கு ஒரு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. இந்த 2026 தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்காக மட்டுமல்லாமல், தங்களின் கௌரவத்தைச் சில தொகுதிகளில் நிரூபிப்பதற்கான ஒரு களமாகவும் திமுகவிற்கு மாறியுள்ளது. பல ஆண்டுகளாகத் துரத்தும் இந்தத் தோல்விப் பயத்தை திமுக இந்த முறை உடைக்குமா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, இந்தத் தேர்தலை ஒரு கௌரவப் போராகவே பார்க்கிறது. வெற்றி பெறாத தொகுதிகளுக்குத் தனி கவனம் செலுத்தி, அங்குள்ள உட்கட்சிப் பூசல்களைக் களைந்து, வலுவான வேட்பாளர்களைக் களமிறக்கத் தலைமைத் திட்டமிட்டுள்ளது. ஒருவேளை இந்த முறை கோவில்பட்டி மற்றும் பெருந்துறையில் திமுக வெற்றி பெற்றுவிட்டால், அது அந்தத் தொகுதிகளின் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக அமையும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com