தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பான்மை பெற ஒரு கட்சிக்கு 118 இடங்கள் தேவை. தற்போது திமுக 64 இடங்களிலும், 62 இடங்களில் அதிமுகவும், 108 இடங்களில் தவெக முன்னிலையில் உள்ளனர். தற்போது வரை தவெக முன்னிலையில் இருந்து வருகிறது. மேலும், இந்த தேர்தல் முடிவுகள் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.
திமுகவிற்கு தவெகவிற்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது. குறிப்பாக தூத்துக்குடி தொகுதியை பொறுத்தவரை திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பின்னடைவை சந்தித்துள்ளார். சட்டமன்ற தேர்தலை சந்தித்த தவெகவை சேர்ந்த ஸ்ரீநாத் மற்றும் திமுகவை சேர்ந்த கீதாஜீவன் போன்றோர் தேர்தலை சந்தித்தனர். ஆனால் கீதாஜீவன் வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்த நிலையில் தற்போது தவெகவை சேர்ந்த ஸ்ரீநாத் வெற்றிபெற்றுள்ளார். திருநெல்வேலி, மதுரை உட்பட தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் தவெக முன்னிலை வகித்த நிலையில் தற்போது முதல் வெற்றியாக தவெகவிற்கு தூத்துக்குடியில் வெற்றி கிடைத்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவை பின்னுக்குத்தள்ளி தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகிக்கிறது. அதனடிப்படையில், தவெகவின் ஸ்ரீநாத் 45,130 வாக்குகளுடனும், திமுகவை சேர்ந்த கீதாஜீவன் 26,274 வாக்குகளையும் பெற்றார். தூத்துக்குடியில் 2011ம் ஆண்டு அதிமுகவை சேர்ந்த செல்லப்பாண்டியனும், 2016 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் திமுகவை சேர்ந்த கீதாஜீவனும் வெற்றி பெற்றனர். ஆனால் தற்போது அதை தகர்த்து தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த ஸ்ரீநாத் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் வந்து வெற்றி பெற்றுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.