விஜய் சொன்ன 'ஒரு வார்த்தைக்கு' இவ்வளவு மதிப்பா? எடப்பாடி தொகுதியில் சுயேட்சை வேட்பாளருக்கு குவியும் ஆதரவு!

நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய சகோதரர்தான்...
vijay and premkumar
vijay and premkumar
Published on
Updated on
1 min read

சேலம் எடப்பாடி தொகுதியில் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முன்னிலை வகித்து வரும் நிலையில், அவருக்கு அடுத்த இடத்தில் தொலைக்காட்சி பேட்டி சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமார் 7 வது சுற்று முடிவில் 16063 ஆயிரம் வாக்குகள் பெற்று எடப்பாடி அடுத்த இடத்தில் இருக்கிறார். தமிழக தேர்தலில் புதிதாக களம் காணும் தமிழக வெற்றி தலைவர் விஜய் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து, மனு தாக்கல் முடிந்த நிலையில் எடப்பாடி தொகுதியில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் அருண்குமார் தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு தலைமறைவானார்.

பலமுறை கட்சி நிர்வாகிகள் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் தொடர்புகொள்ள முடியவில்லை என சொல்லப்படுகிறது. எனவே எடப்பாடி தொகுதியில் வேட்பாளர் இல்லாமல் தவெக பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில் எடப்பாடி தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட பிரேம்குமார் என்பவரை தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக நினைத்து அவருக்கு வாக்களிக்க வேண்டும் என விஜய் தனது கடைசி பிரச்சாரத்தி தெரிவித்தார். அதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பிரேம்குமாருக்கு ஆதரவளிக்க சொல்லி அதிகாரபூர்வமாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

அதில் “என் நெஞ்சில் குடியிருக்கும் சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதி மக்கள் அனைவருக்கும் வணக்கம். எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் கூ. பிரேம்குமார் அவர்கள், முன்பே நமது ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பயணித்தவர்தான். நம்முடைய சகோதரர்தான். எனவே, தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் நமது முன்னாள் நிர்வாகியான திரு. கூ. பிரேம்குமார் அவர்களையும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தையும் நமது தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருமனதாக ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் நமது முழு ஆதரவுடன் களம் காணும் நம் சகோதரர் திரு கூ. பிரேம்குமார் அவர்களை, மனத்தளவில் நம்முடைய வேட்பாளராகக் கருதி, அவருக்குத் தேர்தல் ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ள வரிசை எண் 12-இல் தொலைக்காட்சிப் பெட்டி சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று எடப்பாடி தொகுதியில் எடப்பாடிக்கு அடுத்து பிரேம்குமார் முன்னிலை வகித்து வருகிறார். இதற்கு விஜய் சொன்ன அந்த வார்த்தை காரணம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com