தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை துவங்கியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் (SIR) இரண்டாம் கட்டத்தை தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் நவம்பர் முதல் சிறப்பு வாக்காளர் திருத்தப்பட்டியல் கணக்கெடுக்கும் பணியானது தொடங்கி நடைபெற்றுவந்தது. ஏற்கனவே பீகார் மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பட்டியல் வெளியாகி அங்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதனிடைய தமிழகத்தில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் தேர்தலுக்காக இந்த பணியானது துவங்கி நடைபெற்றுவந்தது.
தற்போது தமிழகம், பாண்டிச்சேரி உட்பட 12 மாநிலங்களில் இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணியில் தமிழகம் முழுவதும் 68,467 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2025 ஜனவரி 1 -ஆம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஒவ்வொருவருக்கும் 2 கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டு வருகிறது. கணக்கீட்டுப் படிவங்களைத் திரும்பப் பெறுவதற்கான அவகாசம் டிச.4 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், அதை டிசம்பர் 11 ஆம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், பல்வேறு காரணங்களால் கணக்கீட்டுப் படிவங்கள் திரும்பப் பெறப்படாத நிலையில், அத்தகைய வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் (எஸ்ஐஆர்) டிச 1 வரை 77,52529 (12.09 சதவீதம்) வாக்காளர்களின் கணக்கீட்டு படிவங்கள் திரும்ப வரவில்லை என்ற புள்ளிவிவரத் தகவல் வெளியாகி உள்ளது.
இதில், 25,72,871 வாக்காளர்கள் இறந்துவிட்டகவும், 8,95,213 வாக்காளர்கள்அடையாளம் காண இயலாதவர்களாகவும், 39,27,973 வாக்காளர்கள் முகவரி மாறியள்ளதாகவும் தேர்தல் ஆணையத்தில் இருந்து பெறப்பட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில், இரட்டை வாக்காளர் பதிவும் அடங்கும். இவர்கள் அனைவரின் கணக்கீட்டு படிவங்கள் திரும்ப வரவில்லை என்றால் டிசம்பர் 11-ஆம் தேதிக்கு பிறகு 77.52 லட்சம் பேரும் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும் அபாயம் உள்ளதாக தெரிகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.